இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழகத்தில் தற்போது அனைவரும் பேசிக் கொண்டிருப்பது நடிகர் அஜித் குமார் கார் பந்தயத்தில் கலந்து கொண்டது பற்றிதான். கார் பந்தயத்தின் மோகம் தமிழகத்தில் உருவெடுக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் கூட சென்னையில் பார்முலா கார் பந்தயம் நடந்தது. இந்நிலையில் நடிகர் அஜித் துபாயில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட பிறகு அனைவரும் அதை பற்றிதான் பேசிவருகின்றனர். ஆட்டோமொபைல் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே கார் பந்தயம் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் கார் பந்தயங்கள் காரில் இருக்கும் இயந்திரங்களை சோதிப்பதற்கே தொடங்கப்பட்டன. முதன்முதலில் 1930-ஆம் ஆண்டுதான் அதிகாரப்பூர்வமாக நடந்தது. முதன்முதலில் கார் பந்தயம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது? இதன் வரலாறு என்ன? கார் பந்தயத்தில் என்னென்ன வகைகள் இருக்கின்றன? இந்தியாவில் கார் பந்தயம் எப்படி நுழைந்தது? என்பதையெல்லாம் பார்ப்பதுடன், கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி குறித்தும், போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, தனது மனைவி ஷாலினியுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது குறித்தும், 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் அளித்த பேட்டி குறித்தும் இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.


1800-களில் நடந்த முதல் கார் பந்தயம்

கார் பந்தயதின் வரலாறு

முதன்முதலில் 1867-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு இங்கிலாந்தின் ஆஷ்டன்-அண்டர்-லைன் நகரிலிருந்து ஓல்ட் டிராஃபோர்ட் இடையே முதன்முதலாக கார் பந்தயம் நடந்ததாக கூறப்படுகிறது. 13 கிலோமீட்டர் நடந்த இந்த போட்டியில் ஐசக் வால்ட் போல்டன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அதற்குபின் பெரிதாக கார் பந்தயங்கள் நடக்கவில்லை. அதன்பிறகு 20 ஆண்டுகளுக்கு பின் 1887-ஆம் ஆண்டு எரிபொருள் வாகனம் அதாவது பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வாகனங்களை கண்டுபிடித்த பிறகு கார் பந்தயம் நடந்தது. இதை பாரிஸ் பதிப்பகத்தின் உரிமையாளர் மோன்சியர் போஸ்சியர் தொடங்கி வைத்தார். இது இங்கிலாந்தின் நியூலி பாலத்திலிருந்து போயிஸ் டி போலோன் வரை 2 கிலோமீட்டர்கள் (1.2 மைல்) நடந்தது. இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் கார் பந்தயங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே இருந்தன. அதன்பிறகு முதல் அமெரிக்க ஆட்டோமொபைல் பந்தயம் நவம்பர் 28, 1895 அன்று சிகாகோ பத்திரிகைக்கு நன்றி கூறும் விதமாக சிகாகோ டைம்ஸ்-ஹெரால்ட் பந்தயமாகக் நடத்தப்பட்டது. இப்படிதான் உலக நாடெங்கும் கார் பந்தயங்கள் நட்கக ஆரம்பித்தன.


அமெரிக்காவில் நடந்த சிகாகோ கார் பந்தயம்

கார் பந்தயத்தில் ஃப்ரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம்

கார் கட்டுமானம் மற்றும் பந்தயத்தில் ஃபிரான்ஸ் ஆதிக்கம் செலுத்துவதால், ஃப்ரெஞ்சு ஆட்டோமொபைல் கிளப் ACF பல முக்கிய சர்வதேச பந்தயங்களை நடத்தியது. கார் பந்தயங்களுகென்று பாரிஸிலிருந்து பல பெரிய நகரத்துடன் சாலைகள் இணைக்கப்பட்டன. கார் பந்தயங்களுக்காகவே ஃப்ரெஞ்சுகார்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே NASCAR . இந்த NASCAR ஆனது பிப்ரவரி 21, 194-ல் பில் பிரான்ஸ் சீனியரால் நிறுவப்பட்டது. மேலும் பல ஓட்டுனர்களின் உதவியுடன் முதல் நாஸ்கார் " ஸ்டிரிக்ட்லி ஸ்டாக் " பந்தயம் ஜூன் 19, 1949 அன்று அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள டேடோனா கடற்கரையில் நடைபெற்றது. அதன்பிறகு 1962-ஆம் ஆண்டு, ஸ்போர்ட்ஸ் கார்கள் என்று தனியாக போர்டின் ஜிடி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன. அதே வருடத்தில் ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி எல் ஆட்டோமொபைல் (எஃப்ஐஏ) ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தின.


ஸ்போர்ட்ஸ் கார் பந்தயமான ஃபார்முலா 1

கார் பந்தயத்தின் வகைகள்

திறந்த சக்கர பந்தயம் (ஓபன் வீல் ரேஸிங்)

இந்த திறந்த சக்கரம் பந்தயத்தில், சக்கரங்கள் மூடப்பட்டிருக்காது. மேலும் இந்த பந்தயத்தில் ஓட்டப்படும் கார்கள் முன்பக்கத்தில் ஏரோஃபாயில் இறக்கைகள் மற்றும் பின்பகுதியில் டவுன்ஃபோர்ஸ் பகுதியை கொண்டும் இருக்கும். இவை பாதையில் ஓட்டுதலை மேம்படுத்தும். திறந்த சக்கர சாலை பந்தயத்தின் மிகவும் பிரபலமான வகைகள் ஃபார்முலா ஒன், இண்டிகார் தொடர் மற்றும் சூப்பர் ஃபார்முலா.

சுற்றுலா கார் பந்தயம் (டூர் கார் ரேஸிங்)

டூரிங் கார் பந்தயம் என்பது ஃபார்முலா பந்தயத்தை போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும். இந்த பந்தயத்தில் நான்கு இருக்கை கொண்ட கார்களை வைத்து பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. சூப்பர் கார் சாம்பியன்ஷிப் (ஆஸ்திரேலியா), பிரிட்டிஷ் டூரிங் கார் சாம்பியன்ஷிப், Deutsche Tourenwagen Masters (DTM), வேர்ல்ட் டூரிங் கார் சாம்பியன்ஷிப் மற்றும் உலக டூரிங் கார் கோப்பை ஆகியவை உலகளவில் நடத்தப்படும் முக்கிய டூரிங் கார் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகும்.


வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் டூர் ரேஸிங்

ஸ்போர்ட்ஸ் கார் ரேஸிங்

இவை GT கார் பந்தயங்கள் ஆகும். GT என்றால் கிராண்ட் டூர் என்று அர்த்தம். ஒவ்வொரு வருடமும் இது ஒவ்வொரு நாட்டில் நடக்கும். கார் பந்தயங்களிலேயே மிகவும் பிரபலமானது இதுதான். ஜிடி கார் பந்தயத்திற்கான முக்கிய தொடர் ஜிடி வேர்ல்ட் சேலஞ்ச் ஐரோப்பா, இரண்டு தனித்தனி சாம்பியன்ஷிப்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை, ஜிடி வேர்ல்ட் சேலஞ்ச் ஐரோப்பா ஸ்பிரிண்ட் கோப்பை மற்றும் ஜிடி வேர்ல்ட் சேலஞ்ச் ஐரோப்பா எண்டூரன்ஸ் கோப்பை என்பவை ஆகும். பல்வேறு FIA GT சாம்பியன்ஷிப் தொடர் இந்தத் தொடருக்கு பின்தான் உருவானது.


சென்னையில் நடந்த ஃபார்முலா 1 கார் பந்தயம்

இந்தியாவில் கார் பந்தயங்கள்

இந்தியாவில் முதன்முதலாக கார் பந்தயம் நடந்தது சமீபத்தில் நடைபெற்ற பார்முலா 4 பந்தயம் தான். அதுமட்டுமில்லாமல் தெற்கு ஆசியாவிலேயே இங்குதான் முதன்முதலாக கார் பந்தயம் அரங்கேறியது. மூன்றரை கிலோமீட்டர் தூரம்வரை, 19 திருப்பங்கள் வைத்து பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்பட்டது. சென்னையில் இப்படி ஒரு சர்வதேச போட்டியை நடத்த முடியுமா என எதிர்பார்த்த அனைவருக்கும் இந்த போட்டி இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அது மட்டுமல்லாமல் போக்குவரத்துக்கு எந்த தடையும் இன்றி வாகனங்கள் பாதி சாலையில் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஆஸ்திரேலிய வீரரும் காட் ஸ்பீட் கொச்சின் நிறுவனத்தின் வீரருமான ஹீட்ஸ் பார்டர், 19 நிமிடம் 42.95 வினாடிகளில் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். பெங்கால் டைகர்ஸ் அணியை சேர்ந்த ஆல்வா முதலிடம் பிடித்தவரை விட 7.29 வினாடிகள் பின்தங்கி இரண்டாவது இடத்தையும், பெங்களூர் ஸ்பீட்ஸ்டர் நிறுவனத்தை சேர்ந்த அபே மோகன் முதல் இடம் பிடித்தவரை விட 26 வினாடிகள் பின்தங்கி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.


24 H கார் பந்தயத்தில் கலந்துகொண்ட அஜித்

மீண்டும் கார் பந்தயத்தின் மீது மோகம்

நடிகர் அஜித் சமீபத்தில் கார் பந்தயத்தில் கலந்து கொண்டதால் இந்தியாவில் மீண்டும் கார் பந்தயத்தின் மோகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. துபாயில் நடைபெற்ற 24 ஹவர் கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில் நடிகர் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், அஜித் குமார் ஓட்டுநராக 414 ஆம் எண் காரை ஓட்டி இருந்தார். இந்த போட்டியில் அவருக்கு "ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ்" என்ற விருது வழங்கப்பட்டது.


கார் பந்தயத்தில் வெற்றி பெற்றதை தனது மனைவியுடன் கொண்டாடிய அஜித்

"தேங்க்யூ ஷாலு!"

இதையடுத்து கையில் தேசிய கொடியுடன் உற்சாகமாக ஓடிவந்த அஜித்துக்கு, அங்கிருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அஜித், தனது மனைவி ஷாலினிக்கு நன்றி தெரிவித்தார். அவர் "Shalu.. Thank you for letting me race" எனக் கூறினார். ஃப்ளையிங் கிஸ் கொடுத்ததுடன், நேரில் கட்டி அணைத்து முத்தமும் கொடுத்தார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் அளித்த பேட்டி

இதற்கிடையே நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது ரசிகர்களுக்கு அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவில், 24 மணி நேர கார் ரேஸ் எவ்வளவு கடினமானது என்பதை விளக்கும் அஜித், தனது ரசிகர்களுக்கு கோரிக்கையையும் வைத்திருக்கிறார். "நான் சொல்ல வேண்டிய விஷயம், சொல்லப்போற விஷயம் ஒன்னே ஒன்னுதான். நீங்கள் எல்லோரும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும், மன நிம்மதியுடனும் வாழணும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன். உங்க குடும்பத்தை முதலில் பாருங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். நன்றாகப் படியுங்கள். கடுமையாக உழைத்து வேலை பாருங்கள். நமக்குப் பிடித்த விஷயங்களை நாம் செய்யும் போது அதில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. அதேநேரம் வெற்றி அடையவில்லை என்றாலும் சோர்ந்து போகாதீர்கள். போட்டிப்போடுவதுதான் மிகவும் முக்கியம். மன உறுதி, அர்ப்பணிப்பை எப்போதும் விட்டுத்தராதீர்கள்" என்கிறார்.


Updated On 14 Jan 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story