வேளாண்மை துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - செந்தமிழ் செல்வி தம்பதியரின் இளைய மகள் டாக்டர் கண்மணிக்கும், சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நீதிபதி திலகவதி - கார்த்திக் தம்பதியரின் மகன் டாக்டர் சித்தார்த் ஆகியோருக்கும் திருமணம் சென்னை திருவான்மியூர் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.

விழாவில் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி. ஆர்.பாலு ,துர்கா ஸ்டாலின், செல்வி, கனிமொழி எம்.பி, முரசொலி செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, டி.ஜி.பி. சங்கர்ஜூவால், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், சி.வெ.கணேசன், சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திராவிட கழக தலைவர் வீரமணி, காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மையம் நிறுவனர் கமலஹாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், அய்யப்பன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ துரை கி. சரவணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், புகழேந்தி, மாநகர தி.மு.க.செயலாளர் கே.எஸ்.ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஒன்றிய செயலாளர்கள் முத்து பெருமாள், காசிராஜன், சுப்பிரமணியன், விஜய சுந்தரம், தனஞ்செயன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அப்பு சத்தியநாராயணன், சிதம்பரம் நகர மன்ற கொறடா ஜேம்ஸ் விஜயராகவன், மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் பால.கலைக்கோவன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன், மூத்த வக்கீல் சிவமணி, ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி சங்கர், நகர செயலாளர் முனைவர் உசேன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மதியழகன், முத்துக்குமார், மணிகண்டன், குட்டிமணி ஜெகன், பிரபு, அன்பழகன், மாணவரணி துணை அமைப்பாளர்கள் பாலாஜி, ராதாகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ், பகலவன், திவ்யா, மாவட்ட பிரதிநிதி சங்கர் மற்றும் நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், விளையாட்டு அணி துணை அமைப்பாளர் சம்பத், தி.மு.க. தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

முன்னதாக கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளரும், எம்.ஆர்.கே.கல்வி குழுமங்களின் தலைவருமான எம்.ஆர்.கே.பி கதிரவன் அனைவரையும் வரவேற்றார்.

Updated On 26 Oct 2023 11:44 AM IST
ராணி

ராணி

Next Story