மலர் மருத்துவத்தில் மனதுக்குத்தான் மருந்து! - விளக்குகிறார் மலர் மருத்துவ தெரபிஸ்ட் வர்மா
பலவிதமான மருத்துவமுறைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கும் பலருக்கும் தெரியாத ஒரு மருத்துவம் மலர் மருத்துவம். இந்த மருத்துவத்தில் வெறும் 38 மருந்துகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் இந்த மருத்துவத்தில் தீர்வு கிடைக்கும் என உறுதியளிக்கிறார் மலர் மருத்துவ தெரபிஸ்ட் வர்மா. அது எப்படி சாத்தியமாகும் என்று தோன்றுகிறதல்லவா? ஆம், இயற்கையாக உடலில் வரக்கூடிய நேரடி நோய்களுக்கு மருந்து இதில் இல்லை என்றாலும், மனிதனால் வரக்கூடிய எல்லா நோய்க்கும் மலர் மருத்துவத்தில் மருந்து இருக்கிறதாம். குறிப்பாக, ஒவ்வொரு நோய்க்காரணிக்குமான மனநிலை மாற்றங்களை கண்டறிந்து அதை சரிசெய்தால் உடலில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை தானாக சரியாகிவிடும் என்கிறார் வர்மா.
மலர் மருத்துவத்தில் எத்தனை வகையான பூக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன?
இந்த மருத்துவத்துக்கு மொத்தம் 38 மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அனைத்துமே லண்டனில்தான் இருக்கின்றன. இந்த மருத்துவத்தை கண்டுபிடித்தவர் இங்கிலாந்து மருத்துவர் என்பதால் அவருடைய ஊரில் கிடைக்கும் மலர்களை வைத்தே மருந்துகளை தயாரித்துவிட்டார். அது அப்படியே இன்றுவரை பின்பற்றப்படுகிறது. லண்டனில் தயாரிக்கப்படும் மருந்துகள் இங்கு கொண்டுவரப்பட்டு, ஹோமியோபதி மருந்துகளுடன் கலந்து தரப்படுகின்றன.
இந்த மருந்துகள் அனைத்தும் திரவமாகத்தான் கிடைக்குமா? அல்லது மாத்திரைகளாகவும் கிடைக்குமா?
திரவமாக வாங்கும் மருந்துகள் ரூ.100 லிருந்து ரூ.150 வரை கிடைக்கும். அதுவே மாத்திரைகளாக வாங்கினால் ரூ.20லிருந்து ரூ.25தான் செலவாகும். ஆனால் திரவ நிலையில் வாங்கி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் எல்லார் வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டியது ரெஸ்க்யூ ரெமிடி மருந்துதான். இந்த மருந்து பலவற்றுக்கு பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்திற்கு, காய் நறுக்கும்போது திடீரென விரலில் காயம் ஏற்பட்டால், இந்த மருந்தை 2 சொட்டு குடித்துவிட்டு, 2 சொட்டு காயத்தின்மீது வைத்தால் உடனடியாக ரத்தப்போக்கு நிற்பதுடன், வலி இல்லாமலேயே காயம் ஆறிவிடும். இந்த மருந்தை வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் வைத்துக்கொள்ளலாம்.
பிறர் சண்டையைகூட சரிசெய்யும் ரெஸ்க்யூ ரெமிடி மருந்து
அதேபோல், யாராவது கண்ணெதிரில் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது, நம்மால் அங்கு சென்று தடுக்கமுடியாவிட்டால், வீட்டிலிருக்கும் இந்த ரெஸ்க்யூ மருந்தை இரண்டு சொட்டு தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு அமைதியாக இருந்தாலே, காரணமே இல்லாமல் அவர்கள் கலைந்து சென்றுவிடுவார்கள். இப்படியெல்லாம் நடக்குமா? என்று பலருக்கும் தோன்றும். ஆனால் மிக அற்புதமாக நடக்கும்.
நைட் ஷிஃப்ட் பணிக்கு செல்லும் நிறையப்பேருக்கு தூக்கமின்மை மற்றும் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். அதை சரிசெய்யமுடியுமா?
ஒருவர் தூங்கும்போது, அவர் படுத்திருக்கும் நிலையை வைத்தே அவருடைய மனநிலையை நம்மால் கண்டுபிடிக்க முடியும். ஒருசிலர் பெட், தரை, சோஃபா என மாறி மாறி படுத்துக்கொண்டிருப்பார்கள். இந்த மனநிலையை சரிசெய்ய மருந்து இருக்கிறது. அதுவே ஒருசிலர் எந்தவித அசைவுமின்றி நேராக படுத்துக்கொண்டு மேலேயே பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் ஒரு மருந்து இருக்கிறது. உதாரணத்திற்கு எல்லாரிடமும் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் ஒரு நபரை தனியாக அழைத்து அவருக்கு என்ன பிரச்சினை? என்று கேட்டால், கேட்பவர்மீது கோபப்படுவார். ஆழ்மனதில் இருக்கும் பிரச்சினையை மறக்கத்தான் அவர் அவ்வாறு சிரித்து பேசிக்கொண்டிருப்பார். இப்படி போலியாக இருப்பவர்களின் கஷ்டத்தை போக்க ஒரு மருந்து இருக்கிறது. OCD பிரச்சினை இருப்பவர்களை இந்த மருந்துகளின் மூலம் சிறப்பாக குணப்படுத்தலாம்.
கோபம் உள்ளிட்ட பல உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் மலர் மருந்துகள்
நோய்களை தடுக்க மருந்துகள் இருக்கிறதா?
மனிதனால் வரக்கூடிய எல்லா நோய்க்கும் மலர் மருத்துவத்தில் மருந்து இருக்கிறது. தலைவலிக்கு மருந்து வேண்டுமென்று நேரடியாக கேட்டால் மலர் மருத்துவத்தில் மருந்து கிடையாது. ஆனால் எந்த மனநிலையால் தலைவலி ஏற்பட்டது என்ற காரணத்தை ஆராய்ந்து அதற்கான மருந்தை கொடுத்தால் மனநிலையுடன் சேர்த்து தலைவலியும் குணமாகும். சிலர் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டது, அதற்கு மருந்து வேண்டுமென்று கேட்பார்கள். ஆனால் அதற்கு மருந்து கிடையாது. மலர் மருத்துவத்தை பொருத்தவரை மனதுக்குத்தான் மருந்து. தலைவலி, வயிற்றுவலி, தூக்கமின்மை என எந்த நோய்க்கும் நேரடியான மருந்து கிடையாது. ஆனால் அந்த நோய்களை வரவைக்க காரணமான மனநிலைக்கு மருந்து இருக்கிறது. ஆனால் மதுபழக்கத்திற்கு அடிமையானவர்களை சரிசெய்ய முடியும். படிக்காதவர்களை படிக்கவைக்க முடியும். தன்னைத்தானே குறை சொல்பவர்களையும், பிறரை குறை சொல்பவர்களையும் திருத்த முடியும். அனைத்துக்கும் பயப்படுபவர்களை பயமில்லாமல் வைத்துகொள்ள முடியும்.
மலர் மருந்துகளை எப்படி பாதுகாப்பது?
இந்த மருந்துகளை ஃப்ரிட்ஜில்தான் வைக்கவேண்டுமென்ற அவசியமெல்லாம் இல்லை. ஆனால் வெயில்படாமல் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் வெயில்பட்டால் இவை ஆவியாகிவிடும். அப்படி ஆவியாகிவிட்டாலும் எந்த பிரச்சினையும் இருக்காது. சுற்றுப்புறத்தில் பரவி, கெட்ட விஷயங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ளும். ரெஸ்க்யூ ரெமிடி மருந்து ஒரு வீட்டில் இருந்தாலே அது 10 வீடுகளுக்கு பாதுகாப்பு அரண் போன்றது. எந்த வீட்டில் பிரச்சினை என்றாலும் உடனடியாக இருந்த மருந்தை கொடுத்தால் மருத்துவர் வரும்வரை பாதுகாக்க முடியும். அதேபோல், உடல்நல பிரச்சினைகளுக்காக மருத்துவரை தேடி செல்லும்போது, இந்த மருந்தை உட்கொண்டுவிட்டு சென்றால் நமக்கு தேவையான மருத்துவர் கட்டாயம் அங்கு இருப்பார். நமக்கு சிறப்பான மருத்துவமும் அளித்து அனுப்புவார்.
மலர் மருத்துவத்தால் கிடைக்கும் நன்மைகள்
இந்த மருந்து குறித்து நம்பகத்தன்மை இல்லையென்று பலர் சொல்கிறார்கள். அதுகுறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இந்த மருந்து அதிக விலையெல்லாம் கிடையாது. 100 ரூபாய்தான் இருக்கும். இந்த மருந்தை வாங்கி பயன்படுத்தி சுய பரிசோதனை செய்து பார்க்கலாம். அப்படி பயன்படுத்துவதன்மூலம் தனக்கு தேவையான பலன் கிடைப்பதை தன்னாலேயே உணரமுடியும். இதில் வெறும் 38 மலர் மருந்துகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் விலை ரூ.100 தான். வேண்டுமானால் ரூ.3800 செலவழித்து அனைத்து மருந்துகளையுமே வாங்கி, ஒவ்வொன்றையும் வெறும் 3 நாட்கள் பயன்படுத்தி பார்க்கலாம். அப்படி செலவழிக்க விரும்பாதவர்கள், ஒரு தெரபிஸ்டிடம் சென்றால், அவர் அந்த நபரிடம் பேசி, அவருடைய மனநிலையை கண்டறிந்து, 100 அல்லது 200 ரூபாயில் பிரச்சினைகளை சரிசெய்வதற்கான மருந்துகளை பரிந்துரைப்பார்.
மலர் மருத்துவர்களை எப்படி அணுகுவது?
மலர் மருத்துவத்துக்கென்றே குரூப்கள் இருக்கின்றன. அதில் சந்தேகங்களை கேட்கலாம் அல்லது தெரபிஸ்டிடம் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டும் சந்தேகங்களை கேட்கலாம். அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை அருகிலிருக்கும் ஹோமியோபதி கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். இந்த மருந்துகளை பயன்படுத்துவதன்மூலம் பல மனநிலை பிரச்சினைகளிலிருந்தும் எளிதில் விடுபடலாம்.