மாலை நேரம் வந்துவிட்டாலே குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள்வரை அனைவரும் டீ, காபியுடன் காரசாரமான நொறுக்குத்தீனிகளை சாப்பிட விரும்புவார்கள். அதிலும் மிக்சர், முறுக்கு போன்றவை பெரும்பாலானவர்களின் விருப்ப பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும். முறுக்கு சார்ந்த தீனிகள் வீட்டில் சுலபமாக செய்ய கூடியதுதான் என்றாலும், எல்லோராலும் நாவில் எச்சில் ஊற வைக்கும் வகையிலான சாஃப்டான முறுக்கினை எளிதில் செய்துவிட முடியாது. அந்த வகையில், இந்த வாரம் நமது ராணி ஆன்லைன் சமையல் பகுதியில் நாம் காண இருப்பது பாரம்பரிய கை முறுக்கு செய்வது எப்படி என்பதைத்தான். இந்த வகை முறுக்கு பலகாரத்தினை நமக்காக செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் திருமதி. லதா.

கை முறுக்கு செய்முறை
அரிசிமாவை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கைப்பிடி அளவு உளுந்து பொடி, சிறிது சீரகம், சிறிதளவு உப்பு, ஆவின் வெண்ணெய் ஆகியற்றை போட்டு நன்கு கிளறி விட்டு, பிறகு மேலாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து சரியான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்.
முறுக்கு பிழியும் அளவுக்கு வந்ததும் ஒரு வட்ட தட்டை வைத்து அதில் கையாலேயே சுருள சுருள 7 வரி அளவுக்கு வட்டமாக சுற்றி வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து பெரிய இரும்பு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வட்டமாக சுற்றி வைக்கப்பட்டுள்ள முறுக்கு மாவை எடுத்து போடவும்.

வெண்ணை கலந்து மாவை பிசைந்து கையாலேயே முறுக்கு சுத்தும் நிகழ்வு
சுமார் 30 நிமிடங்கள் வரை திருப்பி திருப்பி போட்டு சிவக்க வைத்து எடுத்தால் நாவில் எச்சில் ஊற வைக்கும் கிரிஸ்பியான மொறு மொறு அரிசி சுத்து முறுக்கு தயார்.
இதனை நீங்களும் ஒருமுறை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்துகொடுத்து பாருங்கள்.
மீண்டும் செய்துதர சொல்லி கேட்பார்கள்.

முறுக்கை எண்ணெயில் பொறித்து எடுத்தல்
அரிசி மாவில் உள்ள நன்மைகள்
ஒவ்வாமை பிரச்சினை உள்ள நிறைய பேருக்கு இந்த அரிசி மாவு மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும்.
அரிசி மாவில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
அரிசி மாவை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது உடல்நலம் மட்டுமின்றி சருமத்திற்கும் பல நன்மைகளை தரும்.

தயார் நிலையில் கிரிஸ்பியான அரிசி முறுக்கு
எலும்பு மற்றும் பற்களை உறுதியாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவும்.
அரிசி மாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதுடன் குடல் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளை போக்கவும் உதவுகிறது.
