இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தினந்தோறும் வெளியே செல்வதற்கே விதவிதமாக, வித்தியாசமாக ஹேர் ஸ்டைல் செய்துகொள்ள வேண்டுமென ஆசைப்படும் பெண்கள், தங்களுடைய திருமண நாட்களில் இன்னும் அழகாக தெரியவேண்டுமென்று தானே ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த நாளில் மாடர்ன் லுக்ஸைவிட பெரும்பாலும் பாரம்பரியமான ஹேர்ஸ்டைலை போட்டுக்கொள்ளத்தான் அதிகம் விரும்புவார்கள். கடந்த வாரம் இந்து பாரம்பரிய மணப்பெண் அலங்காரம் எப்படி செய்வது மற்றும் நகைகளை எப்படி தேர்ந்தெடுப்பது என விளக்கிய அழகுக்கலை நிபுணர் லலிதா, இந்த வாரம் அதன் தொடர்ச்சியாக ப்ரைடல் ஹேர்ஸ்டைல் எப்படி செய்வது என விளக்குகிறார். குறிப்பாக, நீளமான சவுரி முடி மற்றும் அதன்மீது முழுக்க முழுக்க அலங்கார நகைகளை வைத்து அழகான மணப்பெண் சிகை அலங்காரத்தை நமக்காக செய்துகாட்டியுள்ளார் அவர்.

ஹேர் ஸ்டைல் - ஸ்டெப் பை ஸ்டெப்

ப்ரைடல் ஹேர் ஸ்டைல் செய்யும்போது முடி அடர்த்தியாகவும், சிக்கு விழாமல் இருக்கவும் பெரும்பாலானோருக்கு ஸ்ட்ரெய்டனிங் செய்து, க்ரிம்ப் செய்யப்படும். குறிப்பாக, சுருட்டை முடி கொண்டவர்களுக்கு முடி வெளியே நீட்டி, ஹேர் ஸ்டைல் கலையாமல் இருக்கவேண்டுமானால் முடியை முதலில் அயர்னிங் செய்யவேண்டும்.


க்ரிம்ப் செய்த முடியுடன் சவுரி முடியை இணைத்து பின்னுதல்

அதை க்ரிம்ப் செய்து, நெத்திச்சுட்டி வைக்கவேண்டும். பிறகு சாதாரணமாக வைப்பதுபோன்று விரல்களால் முடியை எடுத்து பஃப் வைத்து, பின் செய்யவேண்டும். அதை கொஞ்சம் முன்பக்கத்தில் இழுத்துவிட்டு செட்டிங் ஸ்ப்ரே அடிக்கவேண்டும்.

இந்து பாரம்பரிய மணப்பெண் அலங்காரம் என்பதால் முடியை பின்னல் போடவேண்டும். நீளமான மற்றும் அடர்த்தியான முடி இல்லாதவர்களுக்கு சவுரி முடியை பொருத்தலாம்.


பின்னிய முடியில் அலங்கார நகையை பொருத்துதல்

பஃப் வைத்து பின் செய்த் முடியின் கீழ்ப்பகுதியில் சவுரி முடியை வைத்து கீழ்வரை பின்னவேண்டும். இப்போது விதவிதமான நிறைய சவுரிகள் வந்துவிட்டன. வேண்டுமானால் பின்னல் போட எடுத்திருக்கும் முடியின் நடுப்பகுதியில் சவுரியை வைத்து நூலால் கட்டியும் பின்னலாம். அப்படி செய்தால் ஹேர் ஸ்டைல் அவிழ வாய்ப்பில்லை. குறிப்பாக, ஸ்ரெய்ட் ஹேர் இருப்பவர்களுக்கு கட்டாயம் அப்படி பின்னல் போட்டால்தான் பிரிந்துவராது.

முடி முழுவதையும் பின்னியபிறகு கீழே குஞ்சம் வைத்து பின்னி, நூலால் இறுக்கமாக கட்டவேண்டும். பின்னலின் மேல்பகுதியிலிருந்து கீழ்வரை ஹேர் ஜுவலை, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஹூக்கால் பொருத்தவேண்டும்.


பூவை பின்னலின் மேற்பகுதியில் சுற்றிவைத்து பின் செய்தல்

மேல்பகுதியில் செட்டிங் ஸ்ப்ரே அடித்து, அதன்மீது மல்லிகைப்பூ அல்லது பிடித்த பூவை ஜடையை சுற்றிலும் வைத்து பின் செய்யவேண்டும். அதன்மீது செயற்கை கலர்பூவை வைத்து கீழே இறுக்கி கட்டிக்கொள்ளலாம்.

ஹேர் ஸ்டைல் முழுவதுமாக முடிந்தபிறகு, காதின் கம்மலுடன் மாட்டலை இணைத்து முடியில் மாட்டவேண்டும். இந்து பாரம்பரிய மணப்பெண் அலங்காரம் ரெடி!

Updated On 21 Jan 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story