இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நமது மூதாதையர்கள் சனி நீராடு என்று சொல்வார்கள். அதில் இருக்கும் பலன்கள் குறித்து நிறையப்பேருக்கு தெரிவதில்லை. ஆனால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அழுத்தம் நிறைந்த வேலைகளில் ஈடுபடுபவர்கள் வரை அனைவருமே தலைக்கு சூடான எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. தலைமுடிக்கான ஹாட் ஆயில் மசாஜ் சிகிச்சையை வீட்டிலேயே எப்படி செய்வது என்பது குறித்தும், அதை பார்லர்களில் எப்படி முறையாக செய்கிறார்கள் என்பது குறித்தும் நம்முடன் உரையாடுகிறார் அழகுக்கலை நிபுணர் பிரியா. மேலும் ஹேர் கலரிங் செய்திருப்பவர்களுக்கும், பொடுகு மற்றும் முடி கொட்டுதல் பிரச்சினை இருப்பவர்களுக்கும் இந்த சிகிச்சையை எப்படி செய்யலாம் என்பது குறித்தும் விளக்குகிறார் அவர்.


High frequency மெஷின் மூலம் ஸ்கால்ப் மசாஜ் கொடுத்தல்

முதலில் high frequency மெஷின் வைத்து சிகிச்சை அளிக்கவேண்டும். இந்த மெஷினிலிருந்து வரும் ரேஸர்ஸால் ஸ்கால்ப்பில் ஒருவித வைப்ரேஷன் கொடுக்கப்படும். அதன்மூலம், தலைமுடியின் வேர்க்கால் துவாரங்கள் நன்றாக திறக்கும். அதன்பிறகு எண்ணெய் தேய்த்தால் அது தோலினுள் நன்றாக இறங்கும். தலைமுடியை ஒவ்வொரு லேயராக எடுத்து சாதாரண சீப்பினால் தலையை சீவுவதைப் போன்று மெஷினால் சீவ வேண்டும்.

நிறைய அரோமா எண்ணெய்கள், வைட்டமின் இ எண்ணெய், ஜோஜுபா எண்ணெய், நல்லெண்ணெய் என எந்த எண்ணெயை வேண்டுமானாலும் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். ஆனால் இவற்றில் எந்த எண்ணெயை பயன்படுத்தினாலும் அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்துதான் பயன்படுத்த வேண்டும்.

எண்ணெய் சூடுபடுத்தும் மெஷின் பயன்படுத்தினால் எண்ணெய் சூடானவுடன் அதுவே தானாக ஆஃப் ஆகிவிடும். அப்படி மெஷின் இல்லாதவர்கள் கைபொருக்கும் அளவிற்கு எண்ணெயை சூடு செய்துகொள்ளலாம்.


எண்ணெய் தேய்த்து பிரஷர் பாயிண்ட்ஸ் அழுத்தம் கொடுத்தல்

சூடாக்கிய எண்ணெயில் காட்டனை தோய்த்து, தலையை சீவிய வாக்கிலேயே எண்ணெயை தடவவேண்டும். கொஞ்சம் அழுத்தம் கொடுத்து சத்தம் வரும் அளவிற்கு தேய்க்கும்போது பொடுகு உதிர்ந்து வருவதை பார்க்கமுடியும்.

எண்ணெயை முடியின் நுனிவரை தடவ வேண்டிய அவசியமில்லை. ஸ்கால்ப்பில் நன்றாக தடவினாலே அது முடி முழுவதுக்கும் பரவி விடும். தலையில் என்ன பிரச்சினை இருந்தாலும் வீட்டிலேயே இந்த சிகிச்சையை செய்துகொள்ளலாம். தலை முழுவதும் எண்ணெய் தேய்த்தபிறகு, மெதுவாக தலைமுழுவதும் விரல்களால் மசாஜ் செய்யவேண்டும்.

பிரஷர் பாயிண்ட்ஸ் தெரிந்தவர்கள் அந்த இடங்களில் அழுத்தம் கொடுக்கலாம். அப்படி தெரியாவிட்டால் தலைமுழுவதும் ஜென்டில் மசாஜ் கொடுத்தாலே போதுமானது. இப்போது கடைகளில் ஹெட் மசாஜர்கள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு இதை செய்யலாம். டேப்பிங் செய்ய நினைத்தால் மிகவும் ஜென்டிலாக செய்யவேண்டும்.


ஹெட் மசாஜர் கொண்டு மசாஜ் செய்தல்

அடுத்து ரிலாக்சேஷனுக்காக தலையை நீவி, பிறகு பகுதி பகுதியாக முடியை எடுத்து ட்விஸ்ட் செய்து அதை மெதுவாக இழுத்துவிட வேண்டும். முடி கொட்டுதல் பிரச்சினை இருப்பவர்கள் இதை செய்தால் நல்ல தீர்வு கிடைக்கும். இப்படி செய்வதால் அழுத்தம், தலைவலி மற்றும் சைனஸ் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

மீண்டும் தலையை சுற்றிலும் மசாஜ் செய்து, மெதுவாக டேப் செய்து, பிறகு பெருவிரலால் தலைமுழுவதும் சர்குலர் மோஷனில் மசாஜ் செய்யவேண்டும். அடுத்ததாக தலைமுதல் கழுத்துவரை பிஞ்சிங் செய்யவேண்டும். இவை அனைத்தையும் மீண்டும் மீண்டும் செய்து, 1 மணிநேரம் எண்ணெயை ஊறவிட வேண்டும். வேண்டுமானால் இதன்மீது ஹேர் பேக் போட்டுக்கொள்ளலாம்.

சளி மற்றும் சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் நீண்டநேரம் தலையில் எண்ணெயை வைக்கவேண்டாம். உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் இரண்டு, மூன்று மணிநேரம் கழித்து தலைக்கு குளிக்கலாம். இந்த ஹாட் ஆயில் மசாஜ் செய்வதால் உடல் மற்றும் மனம் இரண்டுமே ரிலாக்ஸ் ஆகும்.

Updated On 18 Nov 2024 6:28 PM GMT
ராணி

ராணி

Next Story