வாரந்தோறும் முகூர்த்தம் மற்றும் ரிசப்ஷனுக்கு செய்யக்கூடிய மேக்கப் மற்றும் விதவிதமான ஹேர்ஸ்டைல்களை பார்த்துவருகிறோம். இந்த வாரம் எந்த வகையான முடியாக இருந்தாலும் அதன் நீளம் எவ்வளவு இருந்தாலும் அதில் எப்படி கொண்டை ஹேர்ஸ்டைல் போடுவது என செய்துகாட்டுகிறார் அழகுக்கலை நிபுணர் லலிதா. பின்பகுதியில் கொண்டை போட்டாலும் முன்பகுதியில் முகத்தின் வடிவத்திற்கு ஏற்றவாறு எப்படி ஹேர்ஸ்டைல் தேர்ந்தெடுத்து செய்யலாம் எனவும் டிப்ஸ் கொடுக்கிறார்.
நேர் வகிடு எடுத்து காதுகளுக்கு இரண்டு பக்கமும் முடியை விட்டு க்ளிப் செய்துகொள்ளவும். அந்த முடியை அப்படியே வேண்டுமானாலும் ட்விஸ்ட் செய்யலாம். இல்லாவிட்டால் கர்ள் செய்தும் ட்விஸ்ட் செய்யலாம். சிலருக்கு முடியின் அடர்த்தி குறைவாக இருக்கும். அவர்களுக்கு க்ரிம்பிங் செய்தும் ட்விஸ்ட் செய்யலாம்.
கீழுள்ள முடியை யு வடிவில் எடுத்து சிறிய ரப்பர் பேண்டால் போனிடெய்ல் போடவும். ஷார்ட் ஹேரில் இந்த ஹேர்ஸ்டைல் செய்வது இன்னும் சுலபம். நீளமான முடி என்றால் போனிடெய்ல் போட்டு, பெரிய டோனட்டை வைத்து, முடியை சுற்றிலும் சீவி விட்டு, முடியால் டோனட்டை கவர் செய்து மற்றொரு ரப்பர் பேண்டு போடவேண்டும். மீதமுள்ள முடியை கொண்டையை சுற்றிக்கொண்டு வந்து யு-பின் பயன்படுத்தி கலையாதவண்ணம் பின் செய்யவேண்டும்.

நேர் வகிடு எடுத்தல் - முன்பகுதியில் விட்ட முடியை கர்ளிங் செய்தல்
முன்பகுதியில் க்ளிப் செய்துவைத்திருக்கும் முடியில் ஸ்டைல் செய்யவேண்டும். அதில் இரண்டு சிறிய கற்றை முடியை முன்பகுதியில் கர்ளிங் செய்ய விட்டுவிட்டு மீதமுள்ள முடியை சீவ வேண்டும்.
நடுப்பகுதியில் கொஞ்சம் கற்றையாக முடியை எடுத்து சீவி, அதை ட்விஸ்ட் செய்து பக்கத்தில் அடுத்த லேயரை எடுத்து, அதை இறுக்கி சுற்றவேண்டும். அதேபோல் ஒவ்வொரு லேயராக எடுத்து முடியை கொஞ்சம் இழுத்துவிட்டு ட்விஸ்ட் செய்து பக்கத்தில் அடுத்த கற்றையை எடுத்து அதையும் சேர்த்து சுற்றினால் இறுக்கமாக நிற்கும்.
இப்படி ஒவ்வொரு கற்றைகளாக எடுத்து ட்விஸ்ட் செய்து ஹேர்பின்னால் குத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு லேயரை பின் செய்தவுடனும் மேல்பகுதியில் கொஞ்சம் கையால் இழுத்துவிட, பார்க்க அடர்த்தியாக தெரியும்.

டோனட் வைத்து சுற்றிய முடியை மறைத்தல் - மேற்பகுதி முடியை ட்விஸ்ட் செய்தல்
ட்விஸ்ட் செய்தபிறகு கீழே இருக்கும் முடியை கொண்டையின்மேல் இருக்குமாறு நன்றாக சீவி கீழே ரப்பர் பேண்டு போடவேண்டும். ரப்பர் பேண்டு போட்டபிறகு மீதமிருக்கும் முடியை சீவி, இரண்டாக பிரித்து கொண்டையை சுற்றிலும் கொண்டுவந்து கீழே பின் செய்யவேண்டும்.
கொண்டையின்மீது செயற்கைப்பூக்களை வைத்து யு - பின்னால் பின் செய்துவிட வேண்டும். கொண்டையின்மீது போட்டிருக்கும் உடைக்கு ஏற்றவாறு ஜுவெல் வைத்தால் பார்க்க அழகாக தெரியும்.

செயற்கை பூக்கள் மற்றும் ஜுவல் கொண்டு கொண்டையை அலங்கரித்தல்
முன்பகுதியில் விட்ட முடியை கர்ளிங் மெஷின் கொண்டு கர்ள் செய்யவேண்டும். சிலருக்கு அது செட்டாகாது என்பதால் அந்த முடியை வேண்டுமானால் பக்கவாட்டில் கொண்டுவந்து அதையும் காதுக்கு பின்னால் பின் செய்துகொள்ளலாம் அல்லது பிடித்த ஸ்டைலை செய்துகொள்ளலாம்.
பின்பகுதியில் கொண்டை போடலாம் என முடிவு செய்துவிட்டால் முன்பகுதியில் பிடித்தமான எந்த ஹேர்ஸ்டைல் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
