மனிதர்களை விழுங்கும் மந்திரக் குழி? அமெரிக்காவின் பெலிஸ் கடற்கரையில் ஒளிந்திருக்கும் மர்மம்!
இயற்கை தன்னுள் பல ஆச்சர்யங்களை ஒளித்து வைத்து இருக்கிறது. அப்படி அமெரிக்காவின் Belize கடற்கரையில் அமைந்துள்ள நீல துளை, பல ஆச்சர்யங்களை தன்னுள் மறைத்து வைத்திருக்கிறது. இந்த இடம் இயற்கையின் மிகச் சிறந்த புவியியல் அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இயற்கையின் மிக அற்புதமான மற்றும் மர்மமான இடங்களில் ஒன்றாகவும் நீல துளை உள்ளது. பெர்முடா முக்கோணத்தை போன்று இங்கும் கடலுக்கடியில் காந்த ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கிறது என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். நீல துளையில் இருக்கும் மர்மமான விஷயங்களை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
மிகப்பழமையான நிலத்தடி குழியான பெலிஸ் நீல துளை
நீல துளையின் வரலாறும் அதன் பின்னணியும்
Belize நீல துளை அல்லது குழி மிகப்பழமையான நிலத்தடி குகைகளில் ஒன்றாகும். இந்த குழி கிட்டத்தட்ட 14,000 ஆண்டுகளுக்கு முன்பு பனிக்கட்டி யுகத்தின் போது உருவாகியது. அதன்பிறகு நீர்மட்டம் குறைந்திருந்தபோது இது ஒரு சுண்ணாம்பு குகை அமைப்பாக இருந்தது. 1971ஆம் ஆண்டு பிரபல கடல் ஆய்வாளர் ஜாக் கூஸ்தோ மூலம் பிரபலமாகியது. கடற்கரைப் பகுதிகளில் தற்செயலாக கண்டறியப்பட்டது. ஜாக் கூஸ்தோ இந்த குழியை கண்டுபிடிப்பதற்கு முன்பே அப்பகுதி பழங்குடி மக்கள் அதனை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
மனிதர்களை விழுங்கும் பெலிஸ் குழி
நீல துளையின் புவியியல் அமைப்பு
சுமார் 300 மீட்டர் விட்டமும் 125 மீட்டர் ஆழமும் கொண்டது பெலிஸ் நீல குழி. இந்த நிலப்பகுதி கிட்டத்தட்ட 14,000 - 15,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. இங்கு பூமியின் வெப்பநிலை மிகவும் குறைந்திருக்கும். அதே போல கடல் மட்டம் தற்பொழுதைய மட்டத்திலிருந்து சுமார் 120 மீட்டர் கீழே இருந்தது. ஆரம்பத்தில் இப்பகுதி சுண்ணாம்பு படிவுகளாக இருந்தன. அதுமட்டுமில்லாமல் இதன் நிலத்தடி குகைகள் இயற்கையாக உருவானவை. மெல்ல மெல்ல நிலத்தடி நீரோட்டங்கள் பாறைகளை அரிக்கத் தொடங்கின. பின்னர்தான் இவ்விடம் நீர் நீல குழியாக மாறியது. அதன்பிறகு இந்த இடத்தில் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கின. கடல் மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. இந்த குகைகள் நீரில் மூழ்கி அபாயகரமான இடமாக மாறின.
தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் பெலிஸ் குகை
நீல குழியின் அறிவியல் ஆய்வுகள்
1971ஆம் ஆண்டு பிரபல கடல் ஆய்வாளர் ஜாக் கூஸ்தோ இங்கு ஆய்வு மேற்கொண்டார். இந்தச் சுழிப்பாய்வு பற்றிய மிகச் சிறந்த ஆய்வுகளை அவர் வெளிப்படுத்தினார். பல்வேறு அறிவியலாளர்கள் இந்த இடத்தை பற்றிய தகவல்களை அறிய ஆய்வு நடத்தினர். இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் பூமியின் காலநிலை மாற்றத்தை ஆராய்வதற்கான சிறந்த இடம் இது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்கிருக்கும் பாறை மாதிரிகள் பல வரலாற்று ஆய்வுக்கு உதவுகின்றன. இந்த நீல குழி புவியியல் மாற்றங்களின் சாட்சி என்று அறிவியல் ஆய்வாளர்கள் அனைவரும் தெரிவிக்கின்றனர்.
UNESCO அங்கீகாரம் பெற்ற நீல துளை
Belize நீல துளை, 1996ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள இயற்கை வளங்களுக்காக இந்த இடம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இந்த இடம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தாலும் இங்கு ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் செல்ல பயணிகள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த துளைக்கு அருகில் சென்றாலே நம்மை அந்த துளை உள்ளே இழுத்து விடும் ஆபத்து உள்ளது. இதனாலேயே உரிய பாதுகாப்பு இல்லாமல் இந்த இடத்திற்கு செல்ல அனுமதியில்லை. மனிதர்களை உள்ளிழுக்கும் இதனை மந்திர துளை என்றும் மக்கள் அழைக்கின்றனர்.
பல இயற்கை வளங்கள் நிறைந்த பெலிஸ் குழி
சுற்றுச்சூழல் முக்கியத்துவம்
இப்பகுதி இயற்கையின் மிக அரிய மற்றும் அற்புதமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கடல் சுற்றுச்சூழலின் மிகச் சிறப்பான இடமாகவும் பார்க்கப்படுகிறது. மகிழ்ச்சி தரும் நீச்சல் மற்றும் ஸ்கூபா டைவிங் செய்வற்கு மிகவும் ஏற்ற இடமாகவும் உலகளவில் பெயர் பெற்றுள்ளது. உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் Belize கடற்கரை நீல துளை பகுதி விளங்குகிறது.