இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சைவம், அசைவம் என எந்த உணவு வகையாக இருந்தாலும், இறுதியில் சிறிது ரசம் ஊற்றி சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்தியே இருக்கும். அப்படிப்பட்ட ரசத்தில் தக்காளி ரசம், பருப்பு ரசம், புளி ரசம் என பல வகைகள் உண்டு. அனைத்திலும் டாப் என்று சொல்ல வேண்டுமானால் கல்யாணத்தில் பரிமாறப்படும் பைனாப்பிள் ரசம் நிறைய பேருக்கு பிடிக்கும். எனவே இந்த பைனாப்பிள் ரசத்தை வீட்டிலேயே செய்து அசத்த நிறைய பெண்கள் மெனக்கெடுவார்கள். எப்படியேனும் சிரமப்பட்டு ஒருவழியாக அதனை செய்தும் விடுவார்கள். ஆனால், ரசத்தை ஊற்றி சாப்பிட்டுவிட்டு, ஏதோ மிஸ் ஆகுது என்று வீட்டில் உள்ளவர்கள் ஈசியாக சொல்லிவிடுவார்கள். இது நமக்கு பெரும் வருத்தத்தை தந்துவிடும். ஆனால் பைனாப்பிள் ரசத்தை இப்படி வைத்தால், வீட்டிலுள்ள அனைவரும் நம் ரசத்திற்கு ஏங்குவார்கள் என்று சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் சுந்தரி ராகவேந்திரன்.


செய்முறை :

நெல்லிக்காய் அளவுக்கு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றிக்கொள்ள வேண்டும். அதில், நறுக்கி வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், ரசப்பொடி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

அடுத்ததாக பாதி பைனாப்பிள் பழத்தை தோல் நீக்கி அதில் பாதி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி புளி தண்ணீரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு உப்பு, வெல்லம் சிறிதளவு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.


பைனாப்பிள் ரசத்திற்கு தேவையான அளவு வெல்லம் சேர்க்கும் காட்சி

தக்காளி நன்கு வெந்து, ரசப்பொடி மற்றும் இதர மசாலா பொடிகளின் பச்சை வாசனை போக, 5 முதல் 7 நிமிடங்களுக்கு கொதிக்கவிட வேண்டும். இந்த நேரத்தில் கறிவேப்பிலையை ஒன்று இரண்டாக கிள்ளி மேலே போட வேண்டும்.

அடுத்ததாக துவரம் பருப்பை கழுவி வேக வைத்த நீரை வடித்து, இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த பைனாப்பிள் சாறையும் அதில் ஊற்ற வேண்டும். பருப்பு வேகவைத்த நீர், சுவையையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும்.


கொத்தமல்லி தூவி அலங்கரித்த பைனாப்பிள் ரசம்

அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து 2 தேக்கரண்டி நெய் சேர்த்து, கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தூவினால் வெட்டிங் ஸ்பெஷல் பைனாப்பிள் ரசம் ரெடி!

Updated On 27 Aug 2024 12:14 AM IST
ராணி

ராணி

Next Story