இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஆரோக்கியமும், சுவையும் உணவில் மிகவும் முக்கியமான ஒன்று. உடலுக்கு வலு சேர்க்கும் பொருட்களை உட்கொண்டாலே, நோயை ஏற்படுத்தும் எந்த காரணிகளும் நம்மை அண்டாது. அரிசியை காட்டிலும் எட்டு மடங்கு சுவையும், ஊட்டச்சத்தும் நிறைந்த சிறுதானிய வகைதான் கம்பு. இதனை வைத்து கஞ்சி, களி, தோசை, இட்லி, புட்டு என பல்வேறு உணவுகளை செய்யலாம். கம்பு உணவுகளை சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையுமாம். கம்பை இரவு உணவாக அல்லாமல், காலை, மதியம் உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வகையில் கம்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து சுவையான கம்பு பிஸ்கட் எப்படி செய்யலாம் என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் தாமரை செல்வி.

தேவையான பொருட்கள் :


செய்முறை :

கண்ணாடி பாத்திரம் ஒன்றில் உப்பு சேர்க்காத பட்டர் 100 கிராம் எடுத்துக்கொண்டு, இரண்டு நிமிடங்களுக்கு அடிக்கும் கருவியை (Beater) வைத்து அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பட்டர் விரும்பாதவர்கள் 100 கிராம் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து செய்யலாம்.

அதனுடன் நாட்டு சர்க்கரை 50 கிராம், பேக்கிங் சோடா சிறிதளவு, பேக்கிங் பவுடர் சிறிதளவு சேர்த்து ஒரு நிமிடத்திற்கு அடித்துக் கொள்ள வேண்டும். இதில் நாட்டு சர்க்கரை சேர்த்து செய்வதால் உடலுக்கு பல நன்மைகள் உண்டாகும்.


பட்டர், நாட்டு சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து அடிக்கும் காட்சி

பட்டர், நாட்டு சர்க்கரை சேர்த்த கலவையுடன் ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் கலந்து கொள்ள வேண்டும். வெண்ணிலா எசன்ஸ் வேண்டாம் என்றால், ஏலக்காயை நன்றாக பொடித்து சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக கம்பு மாவு 20 கிராமும், கோதுமை மாவு 130 கிராமும் சேர்த்து பீட்டரை வைத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.


பிஸ்கட் மேலே அரை வட்ட வடிவில் டிசைன் கொடுக்கும் காட்சி

பிறகு கைகளை வைத்து கலவையை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கையால் வடை போல தட்டி, குழிக்கரண்டி வைத்து மேல அரை வட்ட வடிவத்தில் டிசைன் போட்டால் பார்க்க நன்றாக இருக்கும்.

இந்த மாவை, 170 டிகிரி ப்ரீ ஹீட் செய்யப்பட்ட மைக்ரோவேவ் ஓவனில் 10 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுத்தால், ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த கம்பு பிஸ்கட் ரெடி!


பேக் செய்யப்பட்ட கம்பு பிஸ்கட்

தினமும் உணவில் கம்பை சேர்ப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் :

நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள் அரிசி உணவு அதிகம் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, கம்பு மாதிரியான சிறுதானியங்களை சாப்பிடுவதன் மூலம் உடல் நல்ல ஆற்றல் பெறும். கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

கம்பில் நார்ச்சத்து அதிகமும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும். தினமும் ஒருவேளையாவது உணவில் கம்பை சேர்த்துக்கொண்டால் உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.

செரிமானக் கோளாறு இருப்பவர்கள் கம்பை உணவில் எடுத்து வந்தால், வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கி, செரிமானம் நன்றாக நடக்கும். குடலை சுத்தம் செய்யும் வல்லமை பெற்ற கம்பு, குடல் புற்றுநோயையும் தடுக்க உதவுமாம்.

கம்பை கூழாகவோ, கஞ்சியாகவோ செய்து, மோர் சேர்த்து குடித்து வந்தால், வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.

Updated On 15 July 2024 6:14 PM GMT
ராணி

ராணி

Next Story