இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இயற்கை மற்றும் பாரம்பரிய உணவுகளின் தாக்கம் என்பது இப்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சிறுதானியங்கள் மற்றும் பிற அரிசிகளின் பயன்பாட்டை அன்றாட சமையல்களில் காணமுடிகிறது. பிரியாணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சீரக சம்பா அரிசியை பயன்படுத்தி ஸ்வீட் செய்துகாட்டுகிறார் சமையல் கலைஞர் சசி ரேகா.


செய்முறை:

1/4 கிலோ அரிசிக்கு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி சாதத்தை நன்கு வேகவைத்து எடுக்கவும்.

கடாயில் நெய்விட்டு சூடானதும் அதில் உடைத்த முந்திரி, திராட்சையை தனித்தனியாக சேர்த்து வறுத்து எடுக்கவும். திராட்சையை வறுக்கும்போது அதில் ஏலக்காயையும் சேர்த்துக்கொள்ளலாம்.

வாணலியில் மீதமிருக்கும் நெய்யில் வேகவைத்த சாதத்தை சேர்க்கவும். சாதம் அடிபிடிக்காமல் இருக்க அடுப்பை சிம்மில் வைக்கவும். அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.

சாதம் நன்கு குழைந்து தண்ணீர் வற்றியதும் நாட்டுச் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும்.

சர்க்கரை நன்கு கரைந்து சாதத்துடன் கலக்கும்வரை கிளறவும். சாதம் சற்று கெட்டியானதும் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து அடிபிடிக்காமல் அல்வா பதம் வரும்வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

கடைசியாக வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காயை சேர்த்து நன்கு வதக்கி, சிறிது நெய் சேர்த்து கிளறினால் சூப்பரான சீரக சம்பா ஸ்வீட் ரெடி.

இந்த இனிப்பை ஆடி மாதத்தில் கோவில்களில் அம்மனுக்கு படைப்பார்கள்.

Updated On 4 March 2024 11:45 PM IST
ராணி

ராணி

Next Story