இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பல வகையான ட்ரை ஃப்ரூட்ஸ்கள் இருந்தாலும் முந்திரி, பாதாம் தவிர்த்து வேறு ட்ரை ஃப்ரூட்ஸ்களை பலரும் உட்கொள்வதில்லை. சிலருக்கு ட்ரை ஃப்ரூட்ஸ்களை சாப்பிடவே பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் சுவையான ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு செய்து சாப்பிடலாம். இதனால் புத்துணர்ச்சியும், குழந்தைகளுக்கு அதிக ஆற்றலும் கிடைக்கும். ஆரோக்கியமான ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


செய்முறை:

  • முதலில் அடுப்பில் கடாயை வைத்து பொட்டுக்கடலை சேர்த்து உலர்வாக வறுக்க வேண்டும். இப்படி முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா என ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுக்கவேண்டும்.
  • அடுத்து எள், வேர்க்கடலை, பேரீச்சப்பழத்தையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும். இம்மூன்றையும் அதிகமாக இல்லாமல் சற்று நேரம் மட்டும் வறுத்து கொண்டாலே போதுமானது.
  • பேரீச்சம்பழம் தவிர, வறுத்துவைத்த அனைத்தையும் ஆறிய பின் மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடிசெய்ய வேண்டும். இவற்றை பொடி செய்த பின்னர் வறுத்து வைத்திருக்கும் பேரீச்சப்பழத்தையும் மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • அரைத்தெடுத்த பொடி மற்றும் பேரீச்சப்பழத்தை ஒன்றாக சேர்த்து கொஞ்சம் ஏலக்காய் பொடி சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும். நெய் விரும்புபவர்கள் நெய் சேர்த்து பிசைந்து லட்டு பிடித்துக் கொள்ளலாம்
  • குங்குமப்பூ, வால்நட், அப்பிரிகாட் வேண்டும் என்பவர்கள் அவற்றையும் சற்று வறுத்து இவற்றுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
  • சத்தான ஆரோக்கியமான ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு ரெடி!
Updated On 6 Nov 2023 6:59 PM GMT
ராணி

ராணி

Next Story