✕
x
நோயின்றி ஆரோக்கியமாக வாழ தினசரி நாம் உண்ணும் உணவில் புரதச்சத்து, வைட்டமின்கள், கனிமங்கள் என அனைத்தும் கட்டாயம் இடம்பெறவேண்டும். அந்த வகையில் புரதச்சத்து நிறைந்த முட்டை, மீன் போன்ற அசைவ உணவுகளை விரும்பாதவர்கள், வீகனாக இருப்பவர்கள், சைவத்தில் வெரைட்டியை எதிர்பார்ப்பவர்களுக்கு ஈஸியான ஷெஸ்வான் டோஃபு ரெசிபி இதோ!
செய்முறை:
- முதலில் டோஃபுவை சிறிது சோளமாவு அல்லது அரிசி மாவு கலந்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானவுடன் கலந்து வைத்த டோஃபுவை போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும் (டோஃபு விரும்பாதவர்கள் மஷ்ரூம் அல்லது பனீர் அல்லது உருளைக்கிழங்கு பயன்படுத்தலாம்).
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிதாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், இஞ்சி- பூண்டு விழுது, கொத்துமல்லி சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும்.
- அவை நன்கு வதங்கிய பின்னர் ஷெஸ்வான் சாஸ், சோயா சாஸ் ஊற்றி பொரித்து வைத்த டோஃபுவை சேர்த்து கிளற வேண்டும்.
- டோஃபு, சோயா சாஸ், ஷெஸ்வான் சாஸ்களில் ஏற்கனவே உப்பு இருப்பதால் உணவை ருசிபார்த்து, பின்னர் தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
- அற்புதமான சுவையில் ஸ்பைசியான ஷெஸ்வான் டோஃபு ரெடி!
ராணி
Next Story