✕
x
மாம்பழம்-அன்னாசி புட்டிங்
செய்முறை
♦ ஒரு கடாயில் 3 தேக்கரண்டி அளவு நெய் ஊற்றவும்.
♦ அதில் ½ கப் ரவையை சேர்த்து நன்கு வறுக்கவும்.
♦ ரவை நன்கு வறுபட்டதும் மாம்பழம் மற்றும் அன்னாசித் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறவும்.
அதில் 1 ½ கப் அளவுக்கு நீர் சேர்த்து நன்கு கிளறி வேக விடவும்.
♦ கலவை நன்கு வெந்தவுடன் அதில் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை நன்கு கிளறி விடவும்.
♦ கலவை கெட்டியானதும் 1 சிட்டிகை ஏலக்காய் தூவி கிளறி விடவும். அதோடு 3 தேக்கரண்டிகள் நெய் ஊற்றி கடாயில் ஒட்டாமல் நன்கு கிளறவும்.
♦ கடைசியில் வறுத்த முந்திரி பருப்புகளை சேர்த்து இறக்கவும்.
குழந்தைகளுக்குப் பிடித்த சுவையான மாம்பழம்-அன்னாசி புட்டிங் தயார்!

ராணி
Next Story