இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

குழந்தைகளின் விருப்பத்தை பூர்த்தி செய்வது மிக கஷ்டமான வேலைதான். அதுவும் சம்மர் விடுமுறையில் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான உணவுகளை செய்து கொடுப்பதென்பது பெற்றோருக்கு பெரிய சவாலாகத்தான் இருந்து வருகிறது. ஐஸ் கிரீம், சாக்லேட் என அவர்களின் விருப்பம் நீண்டு கொண்டே இருக்கும். சாக்லேட், வெப்பமண்டல தியோபுரோமா கொக்கோ மர விதையிலிருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் இது உலகின் ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த ஆதாரங்களிலும் ஒன்றாக திகழ்கிறது. நல்ல டார்க் சாக்லேட்டுகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. எடையை குறைக்க நினைப்பவர்கள் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால், உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்காமல் சீராக வைக்க உதவுகிறது. மேலும் ஒரு சிறிய அளவு சாக்லேட் சாப்பிடுவது பல அதிசயங்களை நிகழ்த்தும் என்றே சொல்லலாம். பெரும்பாலான மக்கள் தேநீர், காபி அல்லது சர்க்கரை ஏற்றப்பட்ட எனர்ஜி பானங்கள் மூலம் தங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறார்கள். ஆனால் சிறிது டார்க் சாக்லேட்டும் நமக்கு அதையே செய்யும். அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி, 2015-ல் வெளியிட்ட ஒரு ஆய்வு முடிவின்படி, டார்க் சாக்லேட் சாப்பிடுவது மைட்டோகாண்ட்ரியாவில் ஆற்றலை மேம்படுத்துகிறது மற்றும் மைட்டோகாண்ட்ரியல் பயோஜெனீசிஸை அதிகரிக்கிறது. இந்நிலையில் சூப்பர் & சிம்பிள் மில்க் மேட் ஃபில்லிங் சாக்லேட் எப்படி செய்யலாம் என சொல்லி கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் மம்தா குப்தா.


செய்முறை:

* முதலில் டார்க் சாக்லேட் அல்லது ஒயிட் சாக்லேட் அல்லது மில்க் சாக்லேட்டை 100 கிராம் எடுத்து ஓவனில் 30 நொடிகளுக்கு உருக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். ஓவன் இல்லையென்றால் டபுள் பாய்லிங் முறையில் சாக்லேட்டை உருக்கி எடுத்துக்கொள்ளலாம்.


தேவையான பொருட்கள் எடுத்து வைக்கப்பட்டுள்ள காட்சி

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீர் சூடானதும் அதன் மேல் மற்றொரு கண்ணாடி பாத்திரத்தில் தேவைக்கேற்ப சாக்லேட்டை எடுத்து உருக்க வேண்டும்.

* உருக்கி எடுத்த சாக்லேட்டை, சதுர வடிவ அச்சில் ஊற்றி 10 நிமிடங்களுக்கு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.


உருக்கி வைத்துள்ள சாக்லேட்டை சதுர வடிவ அச்சில் ஊற்றுதல்

* அடுத்ததாக ஃபில்லிங் செய்ய தேவையான அளவு ஜாம் மற்றும் மில்க் மேட் இரண்டையும் ஒன்று சேர நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* ஃபில்லிங் மில்க் மேட் மட்டுமல்லாது ஐஸ் கிரீம், ஹனி போன்ற விருப்பமான பொருட்கள் எது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


தயாரிப்பு முடிந்து ப்ளேட்டில் வைக்கப்பட்டுள்ள மில்க் மேட் ஃபில்லிங் சாக்லேட்

*பின்னர், ஃபிரிட்ஜில் அச்சில் ஊற்றி வைத்த சாக்லேட்டை வெளியே எடுத்து, கலந்து வைத்துள்ள ஜாம் மற்றும் மில்க் மேட் கலவையை, ஒரு பகுதி சாக்லேட் துண்டில் ஊற்றி மற்றொரு துண்டு சாக்லேட் துண்டை வைத்து மூடி விட வேண்டும்.

* அதே போல் மீதமுள்ள சாக்லேட் ஃபில்லிங்கையும் 10 நிமிடங்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்து எடுத்தால் சூப்பர் & டேஸ்ட்டி மில்க் மேட் ஃபில்லிங் சாக்லேட் ரெடி!

Updated On 28 May 2024 12:07 AM IST
ராணி

ராணி

Next Story