இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தீபாவளி பண்டிகையையொட்டி நமது வீடுகளில் பலகாரங்கள் செய்வது வழக்கம். அப்படி செய்யப்படும் பலகாரங்களில் எண்ணெய், இனிப்பு போன்றவை அதிக அளவில் இருப்பதை பலரும் விரும்புவது இல்லை. இந்நிலையில் பேரிச்சம்பழம் மற்றும் பாதாம்களை பயன்படுத்தி ஆரோக்கியமும், சுவையும் மிகுந்த ஹெல்தி லட்டு எப்படி செய்யலாம் என சொல்லிக் கொடுத்து விளக்கமளிக்கிறார் சமையல் கலைஞர் ரீமா. இந்த லட்டுகளை ஸ்டோர் செய்து ஒரு மாதம்வரை சாப்பிடலாம். தீபாவளிக்கு நண்பர்களுக்கு கொடுக்கும் கிஃப்ட் ஹேம்பரில் கூட இதை வைத்து கொடுக்கலாம்.


செய்முறை :

முதலில் 250 கிராம் பேரிச்சம்பழங்களை கொட்டை நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதே போல் பாதாம்களையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.


நறுக்கி வைக்கப்பட்டுள்ள பேரிச்சம் பழங்கள்

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும், நறுக்கி வைத்துள்ள பேரிச்சம் பழங்களை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.

பேரிச்சம் பழத்துடன் பொடியாக நறுக்கிய பாதாம், கிரான்பெர்ரி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இவை அனைத்தும் ஒன்றுசேர வெந்து லட்டு பதத்தில் பிடிக்க வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.


பேரிச்சம் பழத்துடன் பொடியாக நறுக்கிய பாதாம், கிரான்பெர்ரி சேர்த்து நன்கு கிளறுதல்

இந்த கலவை சூடு பொறுக்கும் அளவில் இருக்கும்போதே சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் பாதாம் பவுடரில் ஒரு கோட் கொடுத்தும் பரிமாறலாம்.


ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த பேரிச்சம்பழம் லட்டு

நாம் எடுத்துள்ள அளவிற்கு 10 லட்டுகள் செய்ய முடியும். எனவே 10 நாட்களுக்கு ஒரு முறையேனும் சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த லட்டுவை செய்து தினந்தோறும் ஒன்று என சாப்பிடலாம்.

Updated On 21 Oct 2024 3:42 PM GMT
ராணி

ராணி

Next Story