✕
x
செய்முறை:
- முதலில் அடுப்பை பற்றவைத்து வாணலியை அடுப்பில் வைக்கவும். வாணலி காய்ந்தவுடன் 1 டீஸ்பூன் எண்ணெயும் 1 டீஸ்பூன் நெய்யும் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்க்கவும்.
- விருப்பப்பட்டால் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
- அதனுடன் முந்திரி, பாதாமைச் சேர்க்கவும். முந்திரி, பாதாமை சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளலாம் அல்லது லேசாக மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாகவும் சேர்க்கலாம்.
- இதனை சிறிது நேரம் வதக்கிய பின்னர், பூசணி விதை, வெள்ளரி விதை, உலர்ந்த திராட்சை, உலர்ந்த பழங்கள், மாதுளம் பழம் என பிடித்த பழங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
- 1 கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்ற கணக்கில் பாஸ்மதி அரிசியை தனியாக வடித்து வைத்துக்கொள்ளவும். பின்னர் வதங்கிய நட்ஸ் மற்றும் உலர் பழங்களோடு வடித்து வைத்த பாஸ்மதி அரிசி சாதத்தைச் சேர்த்து, சிறிதளவு உப்பும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- சிம்பிள் அண்ட் சுவையான நட்ஸ் புலாவ் ரெடி.
ராணி
Next Story