இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பாரம்பரிய உணவுகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2 தசாப்தங்களில் காணாமல்போன பல உணவு வகைகளை கண்டுபிடித்து அதனை மீண்டும் பிரபலப்படுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்றுதான் இட்லி உலையாப்பம். ரவா இட்லி, பொடி இட்லி, தட்டு இட்லி, மல்லிப்பூ இட்லி என இட்லியில் பல வகைகள் தெரியும். ஆப்பமும் தெரியும். ஆனால் அது என்ன இட்லி உலையாப்பம்? செய்துகாட்டுகிறார் சமையல் கலைஞர் கவிதா.


செய்முறை

முதலில் வெல்லத்தை இட்லி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, அதில் கலந்து வைத்திருக்கும் மாவை ஊற்றவும். அதன்மீது துருவி வைத்திருக்கும் தேங்காயை தூவவும். அதன்மீதே சிறுபருப்பையும் (வேண்டுமானால் வறுத்துக்கொள்ளலாம்) தூவவும்.

10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தை இறக்கவும். இட்லி இப்போது மிகவும் சாஃப்டாக வெந்திருக்கும்.

சிறுகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த இட்லி உலையாப்பத்தை மாலை ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம்.

பொதுவாகவே இப்போது மருத்துவர்கள் ஆவியில் வேகவைத்த உணவுகளைத்தான் அதிகம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகின்றனர். அதிலும் நமது ஊரின் பாரம்பரிய உணவான இட்லியை காலை மற்றும் இரவு நேரங்களில் சாப்பிடச் சொல்கின்றனர். எப்போதும் ஒரே மாதிரி இட்லி செய்து சாப்பிடுபவர்களுக்கு ஒரு கட்டத்தில் அது பிடிக்காமலேயே போய்விடும். நிறையப்பேருக்கு இட்லி என்றாலே பிடிக்காது. அதுபோன்ற சமயங்களில் இதுபோல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

இட்லி உலையாப்பத்தில் சேர்க்கப்படும் பொருட்களில் இருக்கும் நன்மைகள்

  • இட்லி மாவுடன் வெல்லம், தேங்காய் மற்றும் சிறுபருப்பு மூன்றுமே சேர்ப்பதால் சுவை அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடுகையில் வெல்லத்தில் செரிமான திரவங்களை தூண்டிவிடும் சக்தி இருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உணவுக்குழாய், வயிறு என உள் உறுப்புகளை சுத்தம் செய்யும். உடல் ஆற்றலையும் அதிகரிக்கும்.
  • ஆஸ்துமா மற்றும் அலர்ஜி இருப்பவர்கள் வெல்லம் சேர்க்கலாம். ரத்தசோகையை போக்கும் தன்மை கொண்டது. மேலும் மக்னீசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற பிற சத்துக்களும் வெல்லத்தில் அடங்கியிருக்கிறது.
  • அதேபோல் தேங்காயிலும் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. தலைமுடி முதல் சருமம் முழுவதையுமே பராமரிப்பதில் தேங்காயின் பங்கு அளப்பரியது. உடலின் வறட்சியை குறைத்து ஈரப்பதத்தை அதிகரிக்கிறது.
  • சிறுபருப்பு என்கிற பாசி பருப்பிலும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. உடல்சூட்டை தணிக்கும். இதில் குறைந்த க்ளைசெமிக் குறியீடுகளே இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. செரிமான பிரச்சினைகளை சரிசெய்கிறது.
Updated On 15 April 2024 11:46 PM IST
ராணி

ராணி

Next Story