இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சென்னா கட்லெட்

மாலை நேர ’ஸ்நாக்ஸ்’க்கு ஆதிரை வேணுகோபால் செய்து காட்டும் சென்னா கட்லெட் செய்யும் முறையைப் பற்றி இங்கு காண்போம்.

தேவையானப் பொருட்கள்


முதலில் சென்னா கட்லெட்டுக்கு தேவையான் பொருட்கள் என்னென்ன என்று பார்ப்போம். ஊற வைத்த வெள்ளை சென்னா (கொண்டைக்கடலை). குறைந்தது சென்னா எட்டு மணி நேரம் ஊறியிருக்க வேண்டும். இரவில் ஊற வைத்தாலும் சரி அதிகாலையிலே ஊற வைத்தாலும் சரி கட்டாயம் எட்டு மணி நேரம் ஊறியிருக்க வேண்டும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய மல்லித்தழை, பிரட் தூள், உப்பு மற்றும் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்.

செய்முறை

முதலில் ஊறிய சென்னாவை நீரை நன்கு வடித்து விட்டு மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மல்லித்தழை, பிரட் தூள், உப்பு ஆகியவற்றை கலந்து கொஞ்சம் கூட தண்ணீர் விடாமல் கைகளால் நன்கு பிசையவும்.

பிசைந்த மாவினை உங்கள் விருப்பத்திற்கேற்ப உருண்டையாக, தட்டையாக அல்லது வேறு ஏதேனும் வடிவில் உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து தட்டி வைத்த மாவினை எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்கள்.

எண்ணெய் வேண்டாம் என நினைப்பவர்கள் ‘ஷாலோ ஃபிரை’ செய்யலாம். அதற்கு ஒரு தோசைக்கல் அல்லது பான் அடுப்பில் வைத்து சூடானதும் தட்டிய மாவினை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூடான சுவையான சென்னா கட்லெட் ரெடி. இதை ‘ஸ்டார்டர்’ ஆகவோ மாலை நேர ‘ஸ்நாக்ஸ்’ ஆகவோ சுவைத்து மகிழலாம்.

Updated On 1 Aug 2023 11:36 AM GMT
ராணி

ராணி

Next Story