இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நம்மில் பலருக்கு டீன்னு சொன்னதும் கூடவே பட்டர் குக்கீஸ் நியாபகம் சேர்ந்து வந்துரும். கேக், சாக்லேட், ஸ்வீட் சாப்பிடாதவங்க கூட பட்டர் குக்கீஸ் பிடிக்காதுன்னு சொல்ல மாட்டாங்க. இந்த பட்டர் குக்கீஸ், மைதா மாவில் செய்யக்கூடியது. மைதா பிடிக்காதவர்கள் கோதுமை மாவு மற்றும் கேழ்வரகு மாவு வைத்தும் செய்யலாம். இப்படி எல்லோருடைய தேநீர் இடைவெளியிலும் இனிமையான பங்கு பட்டர் குக்கீஸ்க்கு உண்டு. கடையில் கிடைக்கக்கூடிய பட்டர் குக்கீஸ் எப்படி செய்கிறார்கள் என அதன் மீதான சுகாதாரதன்மை மேல் நம்மில் பலருக்கு சில சந்தேகங்கள் இருக்கும். இந்நிலையில் ஹெல்த்தி & டேஸ்ட்டி பட்டர் குக்கீஸ் வீட்டிலேயே செய்வது எப்படி என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் தாமரை செல்வி.


செய்முறை:

* முதலில் ஓவனை 10 நிமிடங்களுக்கு 170 டிகிரியில் முன்கூட்டியே சூடு பண்ண வேண்டும்.


பட்டரை கிரீம் போல அடித்துக்கொள்ளும் காட்சி

* அடுத்ததாக உப்பு சேர்க்காத பட்டர் 50 கிராம் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடிக்கும் கருவி (Beater) வைத்து, கிரீம் போல அடித்துக் கொள்ள வேண்டும்.

* அதனுடன் 50 கிராம் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, ஏலக்காய் பொடி சேர்த்து ஒன்று சேர நன்கு அடிக்க வேண்டும். ஏலக்காய் பிடிக்காதவர்கள் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.


தேவையான பொருட்களை Beater வைத்து அடித்துவிட்டு கைகளால் நன்கு பிசைய வேண்டும்

* பின்னர், எடுத்து வைத்துள்ள 150 கிராம் மைதா மாவை அதில் கலந்து கொள்ள வேண்டும். மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு, கேழ்வரகு மாவு கூட சேர்த்து செய்யலாம்.

* பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பர் வைத்து, பட்டர் மைதா மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பிஸ்கட் போல தட்டையாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.


பட்டர் மைதா மாவு கலவையை சிறு சிறு பிஸ்கட்களாக தட்டி வைக்கும் காட்சி

* 12 முதல் 15 வரை தட்டி எடுத்த குக்கீஸில் ஃபோர்க் வைத்து ஒரு வடிவம் கொடுக்கலாம். பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். இறுதியாக குக்கீஸை 10 நிமிடங்களுக்கு ஓவனில் வைத்தால், டேஸ்ட்டி & சூப்பர் பட்டர் குக்கீஸ் ரெடி.


ஓவனில் பேக் செய்து தயாரிக்கப்பட்ட பட்டர் குக்கீஸ்

பட்டரில் உள்ள நன்மைகள்:

* பட்டரை, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அன்றாடம் எடுத்துக் கொள்வது சிறந்தது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

* பட்டர், சரும பராமரிப்பில் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து மென்மையான பொலிவான சருமம் கிடைக்க உதவுகிறது.

* மேலும் இதனை உட்கொள்வதால் எலும்புகள் வலிமை அடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Updated On 3 Jun 2024 6:18 PM GMT
ராணி

ராணி

Next Story