உலகநாயகன் கமல்ஹாசன், ஐந்து வயதில் தொடங்கி எழுபது வயதிலும் திரைத்துறையின் காலமாற்றத்துக்கு ஈடுகொடுத்து புதுமைகளைப் படைத்து வரும் அற்புதக் கலைஞன். நடிகர், நடன இயக்குநர், பாடகர், கதாசிரியர், இயக்குநர் என தசாவதானியாக திகழும் கமல்ஹாசனின் பல்வேறு காலகட்ட புகைப்படங்களின் தொகுப்பு வாசகர்கள் கண்களுக்கு விருந்தாக...
களத்தூர் கண்ணம்மா: ஐந்து வயதில் அறிமுகம். ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே’ பாடலில் உணர்வுப்பூர்வ பாவனை.
பார்த்தால் பசி தீரும்: தெள்ளத்தெளிவாக கணீரென்று வசன உச்சரிப்பு.
பாத காணிக்கை: பால் வடியும் பிஞ்சுப் பருவத்தில் கண்களால் பேசும் நடிப்பு
வானம்பாடி: குழந்தைப் பருவத்தில் முத்திரை நடிப்பு
ஆனந்த ஜோதி : எம்.ஜி.ஆர். மற்றும் தேவிகாவுடன் துறுதுறு நடிப்பு.
மாணவன்: கல்லூரி மாணவனாக குட்டி பத்மினியுடன் துள்ளல் ஆட்டம்.
குறத்தி மகன்: இளைஞனாக உருக்கமான பாத்திரத்தில்
அவள் ஒரு தொடர்கதை: ‘விகடகவி’ பாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில்.
அபூர்வ ராகங்கள்: கதைக்கு நாயகனாக, ‘கேள்வியின் நாயகன்’.
மூன்று முடிச்சு: இரண்டு துருவங்கள் ஒரே கோட்டில்
16 வயதினிலே: ‘சப்பாணி’ பாத்திரத்தில் சவாலான நடிப்பு.
சிகப்பு ரோஜாக்கள்: ‘வில்லன்’ வேடத்தில்.
நாயகன்: நல்லவரா? கெட்டவரா? தெரியாத ‘வேலு நாயக்கர்’
சத்யா: கோபாவேசமான இளைஞன் ‘சத்யா’
அபூர்வ சகோதரர்கள்: வியப்பூட்டும் 3 அடி உயரம் ‘அப்பு’
மைக்கேல் மதன காம ராஜன்: நான்கு தோற்றங்களில் நான்கு பாத்திரங்கள்
குணா: மனோதத்துவ முயற்சி.
தேவர் மகன்: தந்தைக்கு பின் தனயன்
அவ்வை சண்முகி: பெண் வேடத்தில் ‘மேக் அப்’ புரட்சி
இந்தியன்: முதுமைத் தோற்றம் மிடுக்கான நோட்டம்
மகாநதி: அப்பாவி அப்பாவின் பாசப் போராட்டம்
நம்மவர்: கல்லூரி பேராசிரியராக ‘நம்மவர்’
குருதிப்புனல்: கம்பீர காவல் அதிகாரி
ஹே ராம்: புரட்சிக்காரன்
ஆளவந்தான்: கடவுள் பாதி மிருகம் பாதி
பஞ்சதந்திரம்: ஜானகி மனம் கவர்ந்த ராமன்
அன்பே சிவம்: பகைமைக்கு அன்பு பாராட்டும் ‘சிவம்’
விருமாண்டி: மன்னிக்கத் தூண்டும் பெரிய மனிதன்
மச்சம்- கொள்கைநெறி காக்க நீரில் மூழ்கும் ‘நம்பி ராஜன்’
கூர்மம்- அமுதம் கடைய அச்சாக நின்ற ‘ஜனாதிபதி’
வராகம்- பூமியை காக்கும் ‘பூவராகன்’
நரசிம்மம்- கோபம் தெறிக்கும் ‘ஷிங்கான்’
வாமனன்- குள்ள உருவத்தில் ‘கிருஷ்ணம்மாள்’
பரசுராமன்- தாயைக் காக்கும் ‘கலீப்’
ராமன்- கடமை போற்றும் அவதார்
பலராமன்- பலராம் நாயுடு
கிருஷ்ணன்- உலகை காக்க போராடும் ‘கோவிந்த்’
கல்கி- கலி(துன்பம்) முடிக்கும் ‘பிளட்சர்’
என விஷ்ணுவின் தசாவதாரங்களை பத்து கதாபாத்திரங்களாக சித்தரித்த ‘விஸ்வரூபம்’.