லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படத்தின் ஸ்பெஷல் ஷோக்களை திரையரங்குகளில் திரையிடுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருக்கிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட தளபதி விஜய்யின் ‘லியோ’ பட ட்ரைலர் வெறும் 5 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களையும் வெறும் 21 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. சமூக வலைத்தளத்தில் சாதனை படைத்திருந்தாலும் ட்ரைலர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் ரோகிணி திரையரங்கில் ஏராளமான தளபதி ரசிகர்கள் ட்ரைலர் பார்க்கவும், அதை கொண்டாடவும் திரண்டதால் கூட்ட நெரிசலின் காரணமாக கிட்டத்தட்ட 800 க்கும் மேற்பட்ட இருக்கைகள் உடைக்கப்பட்டிருக்கிறது. இது தளபதி ரசிகர்கள் தான் செய்தார்களா அல்லது தளபதிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக இப்படி நிகழ்த்தப்பட்டதா என்பது தெரியவில்லை.
தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த ‘லியோ’ படத்தை திரையரங்குகளில் வழக்கமான காட்சிகளாக மட்டுமல்லாமல் சிறப்பு காட்சிகளாகவும் திரையிட அனுமதி வழங்க கோரி இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தமிழ்நாடு அரசிடம் முறையிட்டிருந்தது. இதன் தீர்ப்பாக தமிழ்நாடு அரசு படம் வெளியிடப்படும் அக்டோபர் 19 அன்று காலை 4 மணி காட்சி மற்றும் 7 மணி காட்சி என்று 2 ஸ்பெஷல் காட்சிகள் திரையிடவும், அக்டோபர் 20 முதல் 24 வரை காலை 7 மணி காட்சி திரையிடவும் அனுமதி அளித்துள்ளது. இந்த செய்தி தளபதி ரசிகர்களுக்கும், திரைப்பட குழுவிற்கும் மகிழ்ச்சி அளித்திருக்கிறது. இதை தொடர்ந்து ட்ரைலரில் இடம் பெற்ற ஆபாச வார்த்தைகளும் நீக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.