இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

திரைத்துறையின் சமீபத்திய சம்பங்களின் தொகுப்புகள் இதோ:

தெருக்கூத்தை மையமாக வைத்து ஆர்.முத்து வீரா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டப்பாங்குத்து’. இந்த படத்திற்கு எஸ்.டி. குணசேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். கரகாட்டத்தைப் போன்று மதுரை வட்டாரத்தில் திருவிழாக்களில் நடத்தப்படும் ஒரு கலை வடிவம்தான் இந்த தெருக்கூத்து. இதில் ராஜா-ராணி ஆட்டம், குறவன்-குறத்தி ஆட்டம், பேயாட்டம், டப்பாங்குத்து, கொலை சிந்து என விதவிதமாக ஆடிப்பாடுவர். மாலை நேரத்தில் துவங்கும் இந்த கூத்து நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறுவது வழக்கம்.


டப்பாங்குத்து திரைப்படக் காட்சி

ட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜவான்’. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஒரு பாடல் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘வந்த எடம்’ என்ற இந்த பாடலுக்கு பிரியாமணியுடன் ஷாருக்கான் மீண்டும் ’லுங்கி டான்ஸ்’ ஆடியிருக்கிறார்.


ஜவான் படத்தில் ஷாருக்கான்

ங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா. திருமணமாகாத நிலையில் இலியான ஒரு ஆண் குழந்தைக்குத் தாயாகியிருக்கிறார். தனது காதலுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தாலும், அவரைப் பற்றி இதுவரை எதுவும் அவர் குறிப்பிடவில்லை.


இலியானா மற்றும் அவரது காதலன்

ஜிஜோ புன்னூஸ் எழுதிய ‘பரோஸ்: கார்டியன் ஆஃப் டி‘காமா’ஸ் டிரஷர்’ என்ற நாவலின் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படம் ‘பரோஸ்’. இந்த படத்தின் மூலம் நடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகிறார். முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாகும் இது பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் வாஸ்கோடா காமாவின் பொக்கிஷங்களை பாதுகாத்து வந்த பரோஸ் என்பவரின் வாழ்க்கைக் கதையை சொல்வதாக அமைந்திருக்கிறது.


பரோஸ் போஸ்டர்

‘நேரம்’ திரைப்படம் மூலம் அறிமுகமான நஸ்ரியா மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வந்தார். ‘பெங்களூர் டேஸ்’ என்ற மலையாளப் படத்தில் தன்னுடன் நடித்த பகத் பாசிலை காதலித்த நஸ்ரியா 2014 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையை விட்டு விலகியிருந்தார். கடந்த ஆண்டு நானியுடன் இணைந்து ‘அன்டே சுந்தரானிகி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருத்தார். இந்த படம் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரில் தமிழிலும் வெளியானது. இந்த திரைப்படம் நஸ்ரியாவுக்கு ஒரு நல்ல ‘கம்பேக்’ ஆக அமைந்தது. இந்நிலையில் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் ஒரு வெப் தொடரில் நஸ்ரியா நடிக்கிறார். இதில் சாந்தனு இவருடன் இணைந்து நடிக்க உள்ளார்.


‘அடடே சுந்தரா’ மற்றும் ‘நேரம்’ திரைப்படத்தில் நஸ்ரியா

‘கேப்டன் மில்லர்’ படத்தை முடித்திருக்கும் தனுஷ் தற்போது தனது 50 வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ’D51’ என்ற அவருடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பு வந்திருக்கிறது. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முவாலா இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிவரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தான நடிக்கிறார். இதன்மூலம் தமிழில் வாரிசு படத்தில் விஜய் ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாகிறார்.


தனுஷ் 50-வது திரைப்படத்தின் போஸ்டர்


Updated On 22 Aug 2023 12:03 AM IST
ராணி

ராணி

Next Story