தமிழ் திரையுலகில் கம்பீரமான மற்றும் கட்டுக்கோப்பான நடிகர்களில் ஒருவர் விஷால். பெரும்பாலும் ஆக்ஷன் மற்றும் அடிதடி காட்சிகள் இவருடைய பொருத்தமாக இருக்கும். கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வந்த விஷாலுக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரையுலகிலும் பல்வேறு பிரச்சினைகள் அடுத்தடுத்து வரவே, அவரால் முன்புபோல் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கமுடியவில்லை. இந்நிலையில் பத்து வருடங்களுக்கும் மேலாக பல்வேறு பிரச்சினைகளால் ரிலீஸாகாமல் தடைபட்டுவந்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் ஒருவழியாக ரிலீஸாகவிருக்கிறது. இந்த படத்தில் விஷால் தனது சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விஷாலை பார்த்த பலரும் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். விஷாலின் உடல்நிலை இந்த அளவிற்கு மோசமாக குடிப்பழக்கம்தான் காரணம் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் வலம்வர, அது பொய் என்று கூறி, விளக்கம் அளித்திருக்கிறார் விஷாலின் மேனேஜர். இந்நிலையில் விஷால் இப்படி ஆனதற்கு காரணம் அவருடைய நண்பர்கள் என்று ஒருபுறமும், பாலாவின் படத்தில் நடித்ததுதான் காரணம் என்று மற்றொருபுறமும் செய்திகள் பரவி சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. அன்று நிகழ்ச்சியில் நடந்தது என்ன? விஷாலுக்கு என்ன ஆனது? பார்க்கலாம்.
‘மத கஜ ராஜா’ புரமோஷன் நிகழ்ச்சி
ஒரு படம் உருவாவதற்குள் பல்வேறு தரப்புகளிலிருந்தும் பல தடைகள் வருவதுண்டு. ஆனால் அவை அனைத்தையும் தாண்டி அந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாவதுதான் படத்தின் முதல் வெற்றியாக பார்க்கப்படும். அப்படி பல்வேறு தடைகளுக்கு மத்தியில் உருவான ‘நரகாசுரன்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘பார்ட்டி’ போன்ற சில படங்கள் ரிலீஸாகாமல் கிடப்பிலேயே கிடப்பது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாவதுண்டு. அவற்றில் ஒன்றுதான் ‘மத கஜ ராஜா’ திரைப்படமும். 2012ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி மற்றும் சோனு சூட் ஆகியோர் நடிக்க உருவான இப்படம், 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்படத்தைவிஷால் உடல்நிலை மோசமானதற்கு காரணம் அவருடைய நண்பர்கள் என்று ஒருபுறமும், பாலாவின் படத்தில் நடித்ததுதான் காரணம் என்று மற்றொருபுறமும் செய்திகள் பரவி சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. அன்று நிகழ்ச்சியில் நடந்தது என்ன? விஷாலுக்கு என்ன ஆனது? தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் சந்தித்த பொருளாதார பிரச்சினைகள் காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இப்படியே ஆண்டுகள் ஒவ்வொன்றாக கடக்கத் தொடங்கிய நிலையில் படத்தின் இயக்குநர் சுந்தர் சி மற்றும் ஹீரோ விஷால் இருவரும் படத்தை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினர். இருப்பினும் படம் வெளியான பாடில்லை.
‘மத கஜ ராஜா’ புரமோஷன் நிகழ்ச்சியில் கட்டித்தழுவிய விஷால் மற்றும் சுந்தர் சி
இனிமேல் இந்த படம் ரிலீஸாவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்த நேரத்தில்தான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கலை முன்னிட்டு வருகிற 12ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் விஷால், சுந்தர் சி, விஜய் ஆண்டனி மற்றும் குஷ்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் விஷாலை பார்த்த அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். காரணம், மைக்கைக்கூட பிடிக்கமுடியாமல் அவருடைய கை நடுங்கியதும், தழுதழுத்த குரலில் அவர் பேசியதும் பார்ப்போரை கலங்கவைத்தது. இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், விஷாலின் தோற்றமே மாறியதற்கும், கை நடுங்குவதற்கும் குடிப்பழக்கம்தான் காரணம் என்று சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில் விஷாலின் உடல்நிலை குறித்து அவருடைய மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். விஷாலுக்கு அதிகப்படியான வைரல் காய்ச்சல் ஏற்பட்டதே அவர் இவ்வாறு ஆனதற்கு காரணம் என்றும், வைரல் காய்ச்சல் முழுமையாக குணமடையாத நிலையிலும் அவர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும், டாக்டர் சர்டிஃபிகேட்டுடன் பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்திருக்கிறார். மேலும் தற்போது விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பரவிய வதந்திகளும் உண்மையல்ல என்றும், அவர் மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
‘அவன் இவன்’ படத்தில் ஒன்றரை கண் வைத்து நடித்த விஷால்
அவன் இவனால் விஷாலுக்கு ஏற்பட்ட பிரச்சினை
‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வரை நன்றாக இருந்த விஷாலுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு வைரல் காய்ச்சல் மட்டும்தான் காரணமா? என்ற கேள்வியை பலரும் எழுப்பிவரும் நிலையில், விஷாலின் நெருங்கிய நண்பரான ஆர்யா பேசிய பழைய வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் நடித்தபோது விஷாலின் கதாபாத்திரம் தன்னைவிட மிகவும் கடினமானது என்று கூறியிருந்தார். மேலும் படப்பிடிப்பின்போது பாலா சார் இங்கே பார், அங்கே பார் என்று கூறும்போதெல்லாம், ‘அவர் எனக்கு நிஜமாகவே ஒன்றரை கண் என்று நினைத்துக்கொண்டாரா?’ என தன்னிடம் விஷால் கேட்டதாகவும், கண்ணை நீண்டநேரம் அப்படியே வைத்திருந்ததால் தாங்கமுடியாத ஒற்றை தலைவலி ஏற்பட்டு மிகவும் அழுவான் என்றும் ஆர்யா கூறியிருந்தார். தலைவலியால் தூங்குவதற்கே மிகவும் கஷ்டப்பட்டதால் அதற்காக போதைப்பொருட்களின் பழக்கத்தை விஷால் வளர்த்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் போதைப்பழக்கத்திற்கே விஷால் அடிமையாகி, மது அருந்தாமல் தூங்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் வெளியே எங்கும் செல்லாமல் இரண்டு நாட்கள்கூட தொடர்ந்து தூங்கும் நிலைமைக்கு ஆளானதாகவும் சொல்லப்படுகிறது.
தனது நெருங்கிய நண்பர்களுடன் விஷால்
நண்பர்கள்தான் காரணமா?
மதுப்பழக்கம் தவிர, நடிகர் சங்க விவகாரத்திலும் விஷாலுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் செய்திகள் வலம்வருகின்றன. ராதாரவி நடிகர் சங்க தலைவராக இருந்த காலத்தில் சரத்குமார், தன்னுடைய அப்பா தயாரித்த படங்களில் நடிக்க கமிட்டாகி, அதில் சில பிரச்சினைகள் ஏற்பட்ட காரணத்தால் தன்னுடைய அப்பாவுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டதால் எப்படியாவது நடிகர் சங்க தலைவராகி சரத்குமாரை பழிவாங்கவேண்டுமென விஷால் முடிவெடுத்தாராம். அதற்காகவே சரத்குமாரின் மகளான வரலட்சுமியை காதலிப்பதுபோன்று விஷால் நடித்ததாகவும் சொல்லப்படுகிறது. பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், விஷாலின் அப்பா, ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளுடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடத்தினார். இதனால் வரலட்சுமி மனமுடைந்து இருந்த நேரத்தில்தான் சரத்குமாரின் நண்பரான மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாயின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. வரலட்சுமியின் காதல் அப்படி திசைதிரும்பிய நேரத்தில், விஷாலுக்கு அந்த பெண்ணுடனான உறவு முறிந்ததுடன், நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் என அனைத்து தரப்புகளிலும் பிரச்சினைகள் வந்து சூழ்ந்துகொண்டன. ஒரு கட்டத்தில் வரலட்சுமியை சந்தித்து, தவறு செய்துவிட்டேன், என்னை மன்னித்து ஏற்றுக்கொள் என்று விஷால் கெஞ்சியதாகவும், ஆனால் ப்ரேக் அப் ஆனது ஆனதுதான் என்று வரலட்சுமி திட்டவட்டமாக சொல்லிவிட்டதாகவும் அந்த சமயத்தில் ஊடகங்களில் பேசப்பட்டன.
வரலட்சுமியுடனான காதலை முறித்துக்கொண்ட விஷால்
இப்படி காதல் மற்றும் கெரியர் என அனைத்திலும் தோல்வியடைந்திருந்த விஷாலுக்கு ஆதரவாக திரையுலகைச் சேர்ந்த இளம் தலைமுறை நடிகர்கள் அனைவரும் நிற்கவே, நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்றார் விஷால். அந்த சமயத்தில் அவருடன் நெருங்கி பழகிய நந்தாவும் ரமணாவும், வேறு யாரையும் விஷாலிடம் நெருங்கவிடாமலும், தனக்கு ஆலோசனை தேவைப்படும் சமயங்களிலும் நெருங்கிய நண்பர்களிடம்கூட பேசி முடிவெடுக்க முடியாத நிலைக்கு விஷாலை தள்ளிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள்தான் விஷாலின் திரைப்படங்கள் வெற்றியடையாமல் போனதற்கும், தயாரிப்பு நிறுவனங்களுடன் விஷாலுக்கு பிரச்சினை ஏற்பட்டதற்கும் காரணம் என்று செய்திகள் வலம்வருகின்றன. குறிப்பாக, லைகா நிறுவனத்துடன் விஷாலுக்கு மோதல் ஏற்பட இவர்கள்தான் காரணம் என்றும், அதனால்தான் மற்ற தயாரிப்பு நிறுவனங்கள்கூட விஷாலை வைத்து படம் எடுக்க தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியிருந்தும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், ‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங்கின்போது விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே ஏற்பட்ட பகிரங்க மோதலும் விஷால்மீது மற்ற இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அவப்பெயர் உருவாக காரணம் என்றும் திரையுலகில் செய்திகள் வலம்வருகின்றன. இப்படி பலதரப்பட்ட பிரச்சினைகளால் மது மற்றும் போதைப்பழக்கங்களுக்கு விஷால் அடிமையானதே தற்போது அவருடைய மொத்த கம்பீரமும் மங்கி தோற்றம் மாறியதற்கும், கை நடுக்கத்திற்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது.