அமெரிக்காவில் இதுவரை தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்தாலும் முதல் முறையாக அமெரிக்காவின் 400 திரையரங்கில் திரையிடப்படும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘2018’.

டோவினோ தாமஸ், தன்வி ராம், ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி, வினீத் ஸ்ரீனிவாசன் என பல மலையாள பிரபலங்கள் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ‘2018’. இந்த ‘2018’ என்ற திரைப்படம் 2018 இல் கேரளாவை உலுக்கிய வெள்ளத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்மை சம்பவங்களை படமாக்கிய இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் ஆவார். ஆகஸ்ட் 16, 2018 யில் ஏற்பட்ட வெள்ளமானதே இதுவரை கேரளாவில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ள பாதிப்பாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த 2 மாத அளவில் அதாவது 16 அக்டோபர் 2018 அன்று இத்திரைப்படத்தின் இயக்குனர் இந்த உண்மை சம்பவத்தை திரைப்படமாக எடுக்க போவதாக அறிவித்தார்.


2018 லேயே அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த படத்தின் படப்பிடிப்பானது என்னவா 2022 மே மாதம் தான் தொடங்கப்பட்டது. பின்னர் அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் படப்பிடிப்பும் நிறைவு செய்யப்பட்டது. முதலில் ஏப்ரல் 21, 2023 இல் வெளியாக இருந்த இந்த திரைப்படம் மே 5, 2023 தான் வெளியிடப்பட்டது. ஆண்டுகள் தாண்டி படம் எடுக்கப்பட்டிருந்தாலும் அறிவிக்கப்பட்ட தேதியை கடந்து படம் வெளியிடப்பட்டிருந்தாலும் இந்த ‘2018’ திரைப்படம் தான் மலையாள சினிமாவின் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக திகழ்கிறது. இப்படம் சுமார் 200 கோடி வசூலை பெற்றிருக்கிறது. இத்திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடா, தெலுங்கு மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இப்படி நல்ல வசூலையும் நல்ல விமர்சனங்களையும் பெற்று வரும் இந்த திரைப்படம் 2024ல் நடக்கும் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் இந்திய அரசினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த ‘2018’ திரைப்படம் அமெரிக்காவின் 400 திரையரங்குகளில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வேலையில் இப்படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இப்படி பல பெருமைகளைப் பெற்ற இந்த திரைப்படம் அமெரிக்காவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்படும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையும் பெற்றிருக்கிறது. இந்தியாவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஆஸ்கார் விருது பெறுமா? மலையாள திரையுலகிற்கும் இந்திய திரையுலகிற்கும் பெருமை சேர்க்குமா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

Updated On 15 Nov 2023 12:24 PM IST
ராணி

ராணி

Next Story