‘நா ரெடி தான் வரவா…’ என்ற லியோ பட பாடல் மாஸ் காட்டிய நிலையில் இன்று மாலை 6 மணியளவில் படத்தின் இரண்டாவது பாடல் ‘பேடேஸ்…’ வெளியாக இருப்பதாக படக்குழு அப்டேட் செய்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ள ‘லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று ‘லியோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தரப்பில் இருந்து இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் நேற்று மாலை ‘லியோ’ திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் ஆன ‘பேடேஸ்…’ என்ற பாடல் இன்று மாலை ஆறு மணி அளவில் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலின் கிளிம்ப்ஸ் ஆனது நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வெளியானது. இந்த அப்டேட்ஸால் மன உளைச்சலில் இருந்த விஜய் ரசிகர்கள் மனம் மாறி மனம் மகிழ்ந்து உள்ளனர். இந்த அப்டேட்ஸ் தான் இன்று இணையதளத்தை ஆக்கிரமித்து உள்ளது. இன்று மாலை வெளியாக உள்ள இந்த முழு பாடலையும் கேட்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சிக்ஸ் பேக்குடன் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர்
இதுமட்டுமின்றி நேற்று மாலை பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை இன்றி சிக்ஸ் பேக்ஸ் வைத்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘கீப் காம் அண்ட் வெயிட் பார் தி லோகி'ஸ் மேஜிக்’ என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்ய வெள்ளத்தில் மூழ்கி சாண்டி மாஸ்டர்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி திரைப்படம் வெளிவருவதற்குள் இது போன்ற அப்டேட்-கள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த படம் வெளியாகியுள்ள இந்த 20 நாட்களும் ரசிகர்கர்களை குஷி படுத்தும் விதமாக பல அப்டேட்-கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.