தமிழில் பிக் பாஸ் என்ற தொடங்கப்பட்ட காலகட்டத்தில் ஜாலியான பொழுதுபோக்காக இருந்தாலும் போக போக சண்டை களமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது. குறிப்பாக இந்த 7 வது சீசன் என்டர்டெய்ன்மென்டை காட்டிலும் முற்றிலும் சண்டையை மட்டுமே குறிக்கோளாக அமைந்திருக்கிறது. இந்த 7வது சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, நிக்சன், மாயா, விசித்ரா என பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 23 நபர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த சீசன் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒருவர் நாமினேட் செய்யப்பட்டு தற்போது 16 நபர்களுடன் போட்டி தீவிரமாக தொடர்கிறது.
இந்நிலையில் கடந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்பைத் தொடர்ந்து பிக் பாஸ்ஸானது இன்னும் சூடேறி இருக்கிறது. மேலும் 28வது நாளில் வைல்ட் கார்டு என்ட்ரியில் உள்நுழைந்த அன்னபாரதி வந்த வேகத்தில் 35வது நாளில் வெளியேற்றப்பட்டார். பிரதீப்பை வெளியேற்றியது சரி என்று ஒரு பக்கமும், தவறு என்று மறுப்பக்கமும் விவாதம் மூண்ட நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இந்த நாமினேஷனில் விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, ஆர்.ஜே.பிராவோ, ஐஷு மற்றும் பூர்ணிமா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
அர்ச்சனா, தினேஷ், விசித்திரா, கூல் சுரேஷ், மணி, ரவீனா உள்ளிட்டோரை இந்த வார கேப்டனாக தேர்வாகி இருக்கும் மாயா ஸ்மால் ஹவுஸ்கு அனுப்பி உள்ளார். கேப்டனாக இருக்கும் மாயா ஸ்மால் பாஸ் போட்டியாளரை, குறிப்பாக விசித்ரா மற்றும் அர்ச்சனாவை டார்கெட் செய்வது போல ஸ்மால் ஹவுஸ்மேட்ஸின் பல் துலக்கும் பிரஷ்களைக்கூட ஒளித்து வைத்து கையில் பல்துலக்க சொல்லி வெறுப்பேற்றி வருகிறார் என்பது போல இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அர்ச்சனா விசித்ராவிடம், “இருக்கும் நாட்களை இவர்களுடன் எப்படி கடக்கப்போகிறோமோ?” என்று வருத்தப்பட்டு கூற, விசித்திராவோ, “என்னதான் பண்ணுறாங்கன்னு பார்ப்போம்; என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்” என்று துணிச்சலாக பேசியிருக்கிறார். இப்படி இவர்கள் ஒருபுறம் பேசிக்கொள்ள மறுபுறம் பூர்ணிமாவும் மாயாவும் ஏதோ பிளான் போடுவது போல தனியாக பேசிக்கொள்கின்றனர். பிரஷை ஒளித்து வைத்து வெறுப்பேற்றும் மாயாவிடம், ஸ்மால் ஹவுஸ்மேட் தினேஷ் பல் துலக்க பிரஷ் கேட்டபோது, “அதுதான் கை இருக்கிறதே... அதில் துலக்குங்கள்” என்று நக்கலான பதிலை சொல்லி இன்னும் வெறுப்பேற்றியிருக்கிறார் கேப்டன் மாயா. இதில் கடுப்பான அர்ச்சனா, “இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் என்று பெயர் வைக்காமல் மாய பாஸ் என்று பெயர் வைத்திருக்கணும்” என்று தனது ஆதங்கத்தை நக்கலாக கூறியுள்ளார்.