வித்தியாசமான கதை களத்தில் விக்ரம் பிரபு, விதார்த் நடித்துள்ள ‘இறுகப்பற்று’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. ‘எலி’, ‘தெனாலிராமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல் வரிகளை எழுதியுள்ளார். அக்டோபர் 6-ந்தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து, வித்தியாசமான கதை களத்துடன் உருவாகி உள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ‘இறுகப்பற்று’ படக்குழு சார்பில் ‘தி கேப்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. வித்தியாசமான இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Updated On 23 Sept 2023 12:10 PM IST
ராணி

ராணி

Next Story