இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(9-1-2005 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

கலைப்புலி தாணுவின் 'சச்சின்' படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க வடக்கே இருந்து இறக்குமதியாகியுள்ள அழகிய பிசாசு பிபாசா. சம்பள விசயத்தில் மற்ற நடிகைகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டார்!

யார் இந்த பிபாசா?

கொல்கத்தாவைச் சேர்ந்தவர். ஐந்தடி எட்டு அங்குல உயரம். 'மாடலிங்' துறையில் புகழ்பெற்று, இவர் மும்பையில் குடியேறினார். சில ஆண்டுக்கு முன் கொல்கத்தாவில் 'சூப்பர் மாடல்' அழகிப் போட்டி நடந்தது. அதில் முதல் பரிசு பெற்றார். 'போர்டு' கார் கம்பெனியின் பிரதான மாடலாக ஆனார்.

அழகிய பிசாசு!

சோனு நிகாம் என்ற பாடகரின் ஆல்பத்தில் 'நீ' என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடினார். அது டி.வி.களில் ஒளிபரப்பாக, இந்தி சினிமாக்காரர்களின் கண்கள் மொய்த்தன! 'அச்நபி' என்ற இந்திப் படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் ஒரு குளியல் காட்சியில் முழு நிர்வாணமாக நடித்து, ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டார். 'அழகிய பிசாசு' என்று பட்டமும் பெற்றார்!


சிவப்பு நிற கவுனில் ஸ்டைலாக காட்சியளிக்கும் பிபாசா

குளியலறையில் முழு நிர்வாணமாகக் குளிக்கும் பிபாசா, உடை மாற்றும் அறைக்கு நிர்வாண கோலத்திலேயே போவார். காதலன் ஆசை ஆசையாக வாங்கிக் கொடுத்த ஆடையை எடுத்து அணிவார். அப்போது அங்கே வரும் காதலன் அதைப் பார்த்து வாய் பிளந்து விடுவார். ரசிகர்களும் வாயைப்பிளந்தார்கள்! அடுத்து 'ராஜ்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார் பிபாசா. அதில் நாயகனாக நடித்தவர் டீனோ மாரியா என்ற புகழ் பெற்ற மாடல் அழகன். அந்தப் படம் வெற்றி பெற்றது.

அதன் பின்தான் புகழ்பெற்ற நடிகர்- நடிகைகளைவிட மாடல் அழகன்- அழகிகளை வைத்து படமெடுக்கலாமே என்ற பழக்கம் ஏற்பட்டது! பட் குடும்பத்துக்கு ரொம்பவே, நன்றிக் கடன்பட்டவர் பிபாசா. அடுத்தடுத்து அவர்கள் படங்களில் நடித்தார். அத்தனையும் வெற்றி. மூன்று படங்களில் பிரபல மாடல் அழகனும், பிபாசா பாசுவின் காதலனுமான ஜான் ஆபிரகாம்தான் கதாநாயகன். மற்றவர்களுடன் நடிப்பதை விட ஜான் ஆபிரகாமுடன்தான் மிகவும் நெருக்கமாக நடித்தார் பிபாசா.


மாடலிங் ஷூட் ஒன்றுக்கு பிபாசா கொடுத்த போஸ்

சந்திரமுகி

'சந்திரமுகி' படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்க முதலில் அணுகியது பிபாசாவிடம்தான். ஏனோ அது சரிப்பட்டு வரவில்லை. 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்தில் தன் நாயகியாக நடிக்க வைக்க கமல் முயன்றார். அதையும் மறுத்துவிட்டார் பிபாசா. "எத்தனை கோடி கொடுத்தாலும் வயதானவர்களுடன் நான் நடிக்க மாட்டேன்" என்று கூறிவிட்டார் என்கிறார்கள்.


'சச்சின்' படத்தில் தளபதி விஜயுடனான பாடல் காட்சியில் பிபாசா

டைரக்டர் மகேந்திரனின் மகன் ஜான் எழுதி இயக்க, விஜய் நடிக்கும் கலைப்புலி தாணுவின் 'சச்சின்' படத்தில் கதாநாயகியாக நடிக்க பிபாசாவை சிபாரிசு செய்திருக்கிறார் விஜய். உடனே தாணுவும் இயக்குநர் ஜானும் மும்பைக்கு விரைந்தனர். அங்கு பிபாசாவை சந்தித்துப் பேசினார்கள். அவரே எதிர்பாராத சம்பளத்தை தருவதாக எடுத்த எடுப்பிலேயே சொன்னாராம் தயாரிப்பாளர் தாணு. தற்போது இந்தியில் பிபாசாவின் சம்பளம், என்பது இலட்சமாம்! தாணு இருபது இலட்சம் சேர்த்துச் சொல்ல, மிரண்டு போனாராம் பிபாசா.

"தமிழ்நாட்டிலிருந்து வந்த இன்னொரு சின்னப்ப தேவர் இந்த தாணு" என்கிறார்கள் இந்திப் பட உலக பெருசுகள். தேவரைப் போல பட்லர் இங்கிலீசாலும், பணத்தாலும் அடிக்கிறார் தாணு என்று கூறி மிரளுகிறார்கள்.


வித்தியாசமான தோற்றத்தில் மயக்கும் பார்வையுடன் பிபாசா

"குட்டைப் பாவாடை அணிந்து நடிக்க வேண்டும். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே?" என்று இயக்குநர் ஜான் தயங்கித் தயங்கிக் கேட்க, 'களுக்’கென்று சிரித்துவிட்டாராம் பிபாசா. "நிர்வாணமாகவே நடித்தவள் நான். அது உங்களுக்குத் தெரியாதோ?" என்றாராம், போதைக் குரலில்! இப்போது சொல்லுங்கள், பிபாசாவுக்கு கோடி கொடுத்தாலும் தகும்தானே!

Updated On 13 May 2024 11:31 PM IST
ராணி

ராணி

Next Story