
(14.11.2004 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)
ஆறு மாதமாக அரசல் புரசலாகப் பேசப்பட்ட விஷயம் தான் தனுஷ்-ஐஸ்வர்யா திருமணம். ஒரு வழியாக திருமண தேதியையும் அறிவித்து விட்டார்கள்.
தமிழ் சினிமா வரலாற்றில் சிவாஜி, எம்.ஜி.ஆருக்குப் பின் மிகப்பெரிய சகாப்தமாக விளங்கும் ரஜினி மகளின் திருமணம், 21 வயதே நிரம்பிய தனுஷ் வெளியிட்டது கோடம்பாக்கத்தில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது உண்மைதான்.
முதலில் திருப்பதியில் நடப்பதாக இருந்த திருமணம், இப்போது ரஜினி வீட்டில் நடைபெற உள்ளது. இருவீட்டாரின் உறவினர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், ரசிகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பு கிடையாது.
ரஜினி திருமணம்
ரஜினி லதா தம்பதியின் திருமணம் திருப்பதியில் நடந்தது. திருமணத்துக்கு முந்தைய நாள் ரஜினி பத்திரிக்கையாளர்களை அழைத்து “நாளை எனக்கு திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் யாரும் அங்கே வரக்கூடாது” என்று சொன்னார். “வந்தால்...” என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டதற்கு ரஜினி சொன்ன பதில் என்ன தெரியுமா? “உதைப்பேன்” என்பது! (உதை பட்டவர்களும் உண்டு!).
ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் திருமண புகைப்படங்கள்
இந்த வகையில் தனுஷ் சொன்ன பதில் பத்திரிக்கையாளர்களை ஆறுதல்படுத்தி இருக்கிறது. “நிச்சயம் உங்கள் எல்லோரையும் வரவேற்புக்கு அழைப்பேன், கட்டாயம் வர வேண்டும்” என முன்கூட்டியே அன்பு கட்டளை போட்டு அழைத்துவிட்டார், தனுஷ்!
மகிழ்ச்சிகரமான தருணங்களில் எடுக்கப்பட்ட தனுஷ் - ஐஸ்வர்யா புகைப்படங்கள்
பண்ணை வீட்டில்
சென்னையை அடுத்த கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெறும். இரு வீட்டார் மட்டும் கலந்து கொள்ளுவார்கள். தினத்தந்தியில் மட்டும் திருமணப்படம் வெளிவரும். திருமணத்துக்கோ, வரவேற்புக்கோ அழைப்பிதழ் அச்சிடவில்லை. வரவேற்பு நடத்துவது பற்றி இன்னும் முடிவாகவில்லை.
தனுஷ் - ஐஸ்வர்யா திருமண வரவேற்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
சிலம்பரசன்
தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் பற்றி சிலம்பரசனிடம் கேட்டோம் “இப்போது என் கவனம் முழுவதும் “மன்மதன்” படத்தின் மீதுதான். திருமணம் செய்து கொள்ளப்போகும் தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு என் வாழ்த்துகள். அழைப்பு வந்தால் திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பேன்” என்றார் சிலம்பரசன்.
பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது நடிகர் சிம்புவுடன், தனுஷ்
தலை தீபாவளி
தீபாவளி கழித்து ஒரு வாரம் பின்தான் தனுஷ் திருமணம் நடைபெற உள்ளது. தீபாவளிக்கு முன் திருமணம் நடந்திருந்தால், இப்போது தலை தீபாவளி கொண்டாடுவார், தனுஷ் . அடுத்த ஆண்டு தனுஷ் தனது குழந்தையுடன் தலை தீபாவளி கொண்டாடுவார் என எதிர்பார்க்கலாம்.
