இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(21.11.1999 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)

அய்யர் மந்திரம் ஓத, அக்னி சாட்சியாக தாலி கட்டி, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, உற்றார் உறவினர் - ஊரார் வாழ்த்தி மலர் தூவினால்தான் ஓர் ஆணும் பெண்ணும் ‘தம்பதிகள்’ ஆகிறார்கள். இணைந்து இல்லறம் நடத்த அவர்களுக்குத்தான் உரிமை உண்டு என்று நாம் நினைக்கிறோம்!

ஆனால், எத்தனையோ ஜோடிகள் ‘திருமணம்’ என்ற பந்தத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல், இணைந்து வாழுகிறார்கள்! கணவன் - மனைவியாக குடும்பம் நடத்துகிறார்கள்!!

திருமணம் என்ற வேலி அல்லது தாலி அவர்களைக் கட்டுப்படுத்துவதும் இல்லை! அவர்களின் ஜாலிக்கு தடையாக இருப்பதும் இல்லை!

இந்த இனிய இணைப்பிலேயே அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளுவதும் உண்டு!!


திருமணத்திற்கு முன்பாக இயக்குனர் சுந்தர்.சி உடன் நடிகை குஷ்பு

சின்ன வீடு!

‘சின்ன வீடு வைத்துக்கொள்ளுகிறார்களே, அதுதானே?’ என்று கேட்பீர்கள்! ஆனால், அது அல்ல!!

‘அவளை வைத்திருக்கிறான்’ என்போமே, அதுவா?’ என்று வினவுவீர்கள். ஆனால், அதுவும் அல்ல!

இவர்கள் ரகசியமாக வாழ்வது இல்லை. எல்லாம் பகிரங்கமே! திருமணம் செய்துகொள்வது இல்லை என்பதைத் தவிர, இவர்கள் தம்பதிகளைப் போன்றே வாழுவார்கள்!

மேல்நாடுகளில்

நமது நாட்டில் இது புதுமையாக இருக்கலாம். ஆனால், மேல்நாடுகளில் இது சர்வசாதாரணம். மேல்நாட்டுத் தம்பதிகளில் 100க்கு 50 பேர் இப்படி வாழுகிறவர்கள்தான்!

ஆண்டுக்கணக்கில் சேர்ந்து வாழுவார்கள். குழந்தையும் பெற்றுக்கொள்ளுவார்கள். ஆனால், திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்!

‘திருமணமா? சுத்த போர்! முதலில் சுதந்திரத்தை அடகு வைக்க வேண்டும்! வெறுமனே சேர்ந்து வாழ்வதில் எத்தனையோ வசதி இருக்கிறது’ என்கிறார்கள்!


திருமணத்திற்கு முன்பாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணியுடன் நடிகை ரோஜா

நடிகை குஷ்பு!

இன்றைய தமிழ்த் திரையுலகில் கோடி ரூபாய் கேள்வி ஒன்று இருக்கிறது! அது குஷ்பு எப்போது திருமணம் செய்துகொள்ளுவார்?

நடிகை குஷ்புவும், இயக்குநர் சுந்தரும் காதலர்கள். ‘மூன்று ஆண்டில் திருமணம் செய்துகொள்ளுவோம்’ என்று அவர்கள் அறிவித்து ஐந்தாண்டு ஆகிவிட்டது! “என் திருமணம் எப்போது நடக்கும் என்று எனக்கே தெரியாது!” என்று குஷ்பு கையை விரித்துவிட்டார்!

ஆனாலும், சுந்தர் - குஷ்பு இருவரும் கடந்த ஐந்தாண்டு காலமாகச் சேர்ந்து வாழுகிறார்கள்! விழாக்களுக்கு ஒரே காரில் வருகிறார்கள். வெளியூர்களுக்கு, வெளிநாடுகளுக்குப் போனால், இருவரும் ஒரே ஓட்டலில் ஒரே அறையில் ஒன்றாக தங்குகிறார்கள்! தாலிகட்டாமலே குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!


காதலர்களாக இருந்த போது நடிகை குஷ்பு மற்றும் சுந்தர்.சி

முன்னாள் நடிகை!

ஒரு முன்னாள் நடிகைகூட ஒருவருடன் அப்படிப் குடும்பம் நடத்துகிறார்!

ஐஸ்வரியமான நடிகை. மதம் மாறி ஒருவரை மணந்துகொண்டு, ஒரு குழந்தைக்கும் தாய் ஆனார். பிறகு கணவனை விவாகரத்து செய்தார். இப்போது வேறு ஒருவருடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்! இத்தனைக்கும் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை!

நடிகை ரோஜா!


ஆர்.கே.செல்வமணி மற்றும் ரோஜாவின் திருமண புகைப்படம்

நடிகை ரோஜாவும், இயக்குநர் செல்வமணியும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தியது ஊர் அறிந்த ரகசியம்!

‘அவர்கள் எல்லாம் நடிகைகள். எப்படியும் வாழுவார்கள்’ என்பீர்கள். ஆனால், சாதாரணப் பெண்கள் அன்றாடம் நாம் சந்திக்கும் ஆண்கள் திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழுகிறார்கள்!

Updated On 28 Nov 2023 12:03 AM IST
ராணி

ராணி

Next Story