இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சமீப காலத்தில் வளர்ந்து வரும் அழகு கலைகளில் "நெயில் ஆர்ட்" ஒன்றாகும். நகங்களை பராமரிப்பது, அதை அழகுப்படுத்துவது, அதில் விதவிதமான டிசைன்களை வரைவது தற்போது அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் நகத்தை வெட்டி சிவப்பு நிற நெயில் பாலிஷ் போடுவதுதான் வழக்கம். தற்போது நகங்களில் பல வண்ணங்களில் நெயில் பாலிஷ் போடுவதுடன், அதில் அழகான டிசைன்களை வரைவதும் பெண்கள் மத்தியில் ட்ரெண்டாக உள்ளது. இந்த நெயில் ஆர்ட், ஜெல் பாலிஷ், மார்பிள் நகங்கள், கேட் ஐ டிசைன், ஸ்டோன் டிசைன் என பல வகைகளை கொண்டுள்ளது. நகம் சிறிதாக இருப்பவர்களுக்கு எக்ஸ்டென்ஷனும் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஜெல் பாலிஷ் எப்படி செய்வது என சொல்லி கொடுத்து விளக்குகிறார் நெயில் ஆர்டிஸ்ட் அக்‌ஷிதா.

செயல்முறை:

* முதலில் கைகளில் உள்ள கியூட்டிகளை சரி செய்ய வேண்டும். இவ்வாறு கியூட்டிகளை சரி செய்வதன் மூலம் நகம் சற்று நீளமாக பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.


கை விரல்களில் உள்ள க்யூட்டிகளை சரி செய்யும் காட்சி

* அடுத்ததாக நகங்களை (Buffer block) வைத்து ப்ரெப்பிங் செய்ய வேண்டும். நகங்களில் உள்ள வழுவழுப்பு தன்மை நீங்க இவ்வாறு செய்ய வேண்டும். இதன் மூலம் ஜெல் பாலிஷ் நீண்ட நாட்கள் வரை இருக்கும்.

* ப்ரெப்பிங் செய்தபின் நகங்களில் இருக்கும் தூசி, அழுக்குகளை எத்தனால் கொண்டு துடைக்க வேண்டும். பிறகு ப்ரைமர் அப்ளை செய்ய வேண்டும். ப்ரைமர் போடுவதால் ஜெல் பாலிஷ் நகங்களில் நன்கு ஒட்டிக்கொள்ளும்.


ப்ரெப்பிங் செய்யப்பட்ட நகங்கள்

* நெயில் பாலிஷ் மற்றும் ஜெல் பாலிஷ் போடுவதற்கு முன்னாள் பேஸ் கோட் கட்டாயம் போட வேண்டும். இதன் மூலம் நகம் நிறம் மாறுவதை தவிர்க்க முடியும். மேலும் நெயில் பாலிஷ் மற்றும் ஜெல் பாலிஷ் நீண்ட நாட்கள் வரை நகங்களில் இருக்க உதவும்.

* பேஸ் கோட் போட்ட பிறகு விரல்களை எல்.இ.டி லைட்டில் வைக்க வேண்டும். ஜெல் பாலிஷ் சாதாரணமாக காற்றில் காய்வது சற்று கடினம். எனவே எல்.இ.டி லைட்டில் 30 நொடிகளுக்கு வைத்தால் எளிதில் காய்ந்து விடும்.


பேஸ் கோட் போட்டு, டாப் கோட் செய்யப்பட்ட நகத்தின் காட்சி

* பேஸ் ஜெல் கலர் எடுத்து நகத்தில் பிரஷ் வைத்து இரண்டு கோட் போட வேண்டும். அடுத்ததாக டாப் கோட் போட வேண்டும்.

* ஆர்ட் செய்ய விருப்பமான நகத்தில் மேட் ஃபினிஷ் ஜெல்லை அப்ளை செய்ய வேண்டும். ஆர்ட் ஜெல் வைத்து விருப்பமான டிசைன் போட்டு குரோம் அப்ளை செய்த பிறகு தேவையற்ற குரோம்களை எடுத்து விட வேண்டும். இறுதியாக டாப் கோட் போட்டால் நெயில் ஆர்ட் முடிந்தது.


நகங்கள் மீது குரோம் ஆர்ட் செய்யும் முறை

நெயில் பராமரிப்பில் கடைபிடிக்க வேண்டியவை:

* சரிவிகித உணவை சாப்பிடுங்கள். உணவில் வைட்டமின், நார்ச்சத்து, புரதம், கால்சியம் போன்றவை இடம் பெற வேண்டும்.

* சானிடைசர்ஸ் அதிகம் பயன்படுத்துவது நகங்களை பலவீனப்படுத்தும்.

* ஒரு முறை போட்ட நெயில் பாலிஷை அப்படியே நீண்ட நாட்களுக்கு விடாமல், நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கி நகங்களை ஃப்ரீயாக விடுவது நல்லது. குறிப்பாக, அடர் நிற நெயில்பாலிஷ்களை விரைவில் நீக்கிவிடுவது நல்லது. அதே நேரம், அடிக்கடி நெயில் பாலிஷ் ரிமூவரை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

*அதிக நேரம் நீருக்குள் கையை வைத்திருக்கும் சூழ்நிலையில் கையுறை அணிந்து கொள்வது நல்லது.


Updated On 8 July 2024 6:15 PM GMT
ராணி

ராணி

Next Story