இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

திருமணம், ரிசப்ஷன் எதுவாக இருந்தாலும் சரி, உடை மற்றும் அவர்களின் மேக்கப் முக்கியமான ஒன்று. சமீபகாலத்தில் நோ மேக்கப் லுக் என்பதே ட்ரெண்டிங் என சொல்லலாம். அந்த அளவிற்கு சிம்பிளாக இருக்க வேண்டும் என எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். ரிசப்ஷன் பொறுத்தவரை 4 முதல் 6 மணி நேரம் வரை மேக்கப் அழியாமல் இருக்க வேண்டும். போட்டோஷூட் மற்றும் ரிசப்ஷனில் எடுக்கும்போது போட்டோக்கள் அழகாக இருக்க நல்ல மேக்கப் அவசியம். அப்படி மேக்கப் போட தேவையான டிப்ஸ் & ட்ரிக்ஸை சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் அழகு கலை நிபுணர் பிரதீபா.

செயல்முறை:

மேக்கப் போடுவதற்கு முன்னால் நல்ல க்ளென்சர் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். அவரவர் சருமத்திற்கு ஏற்ப மாய்ச்சுரைசர் தேர்வு செய்து அப்ளை செய்ய வேண்டும். லென்ஸ் வைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு மேக்கப் போடுவதற்கு முன்பே போட்டுவிட வேண்டும்.

அடுத்ததாக முகத்தில் இருக்கும் கரும்புள்ளி, முகப்பரு தழும்புகள், கருவளையம் போன்றவற்றை மறைக்க கன்சீலரை பிரஷ் வைத்து முகம் முழுதும் டேப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் ஸ்கின் கலர் ஒரேமாதிரி தெரியும்.


கண்களில் ஐ-ஷேடோ அப்ளை செய்யும் முறை

பிறகு பவுண்டேஷனை, ஸ்கின் டோனுக்கு ஏற்ப எடுத்து பிரஷ் வைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியை கவர் செய்யும்படி நன்கு டேப் செய்ய வேண்டும்.

ஐ மேக்கப்பில், முதலில் டிரஸ் கலருக்கு ஏற்ற ஐ-ஷேடோவை எடுத்து அப்ளை செய்ய வேண்டும். அடுத்ததாக புருவங்களில் இருக்கும் இடைவெளிகளை நிரப்ப வேண்டும். ஐ லைனர் போட்டால் இன்னும் கண்கள் பார்க்க நன்றாக இருக்கும். பிறகு கண் இமைகளுக்கு மஸ்காரா போட வேண்டும்.


சிம்பிள் & எலகண்ட் ரிசப்ஷன் லுக்

ப்ளஷ் அப்ளை செய்தால் சிம்பிள் & எலகண்ட் ரிசப்ஷன் லுக் முடிந்தது. இவ்வாறு செய்யும்போது மேக்கப் போட்டது போலவே இருக்காது. நேச்சுரல் ஸ்கின் டோன் போலவே இருக்கும். இப்படியும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

Updated On 12 Aug 2024 6:27 PM GMT
ராணி

ராணி

Next Story