இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சரும நிறத்தை அதிகரிப்பதைவிட சருமம் பளிச்சென்றும், ஆரோக்கியமாகவும் இருப்பதைத்தான் இன்றையகால பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். சரும நிறத்தை கூட்டும் க்ரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் விற்பனையைவிட சருமத்தை க்ளீனாகவும், பளிச்சென மாற்றுவதற்குமான க்ரீம்கள் அதிகம் விற்பனையாகின்றன. பார்லர்களிலும், சருமத்தை மெருகேற்றவும், பளிச்சென வைக்கவும் பல சிகிச்சைகளும், ஃபேஷியல்களும் செய்யப்படுகின்றன. சருமத்தை பாலிஷாக்கும் மைக்ரோடெர்மாபிரேஷன் (Microdermabrasion) எப்படி செய்வது என விளக்குகிறார் பியூட்டீஷியன் மாலதி. சரும சுருக்கங்கள், சரும துளைகள், மெலாஸ்மா, ஹைபர் பிக்மெண்டேஷன் மற்றும் stretch marks போன்ற பிரச்சினைகளுக்கு இந்த சிகிச்சை நல்ல தீர்வு தரும் என்கிறார் அவர்.

பெரும்பாலான சரும சிகிச்சைகளுக்கு ஃபேஷியல் போன்று இல்லாமல் எத்தனை சிட்டிங்குகள் பரிந்துரைக்கப்படுகிறதோ அத்தனை முறை செய்தால்தான் முழுமையான பலனை அடையமுடியும்.


முகத்தை டபுள் க்ளென்ஸ் செய்து ஈரமில்லாமல் துடைத்தல்

முதலில் சருமத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல் க்ளென்சர் பயன்படுத்தி க்ளென்ஸ் செய்யவும். சிகிச்சைமுறை ஃபேஷியல்களை செய்யும்போது எப்போதுமே டபுள் க்ளென்ஸ் செய்வது அவசியம். கண்களுக்கு போட்டிருக்கும் மேக்கப் மற்றும் லிப்ஸ்டிக் போன்றவற்றை முதலில் நீக்கிவிட்டு பிறகுதான் க்ளென்ஸ் செய்யவேண்டும். க்ளென்சிங் முழுவதும் முடிந்தபிறகு டிஷ்யூ பேப்பர்கொண்டு ஈரமில்லாமல் துடைக்கவும்.

மைக்ரோடெர்மாபிரேஷன் சிகிச்சையில் டயமண்ட் பாலிஷிங் மற்றும் கிறிஸ்டல் பாலிஷிங் என இரண்டு வகைகள் இருக்கின்றன. சருமம் கடினமாக இருப்பவர்களுக்கு கிறிஸ்டல் பாலிஷிங் செய்யலாம். சாதாரண சருமம் கொண்டவர்களுக்கு டயமண்ட் பாலிஷிங் செய்யலாம்.

இந்த சிகிச்சையை செய்யும்போது முதலில் சருமத்தில் மேற்பகுதியான எபிடெர்மலில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி சருமம் மென்மையாகும்.


MDA மெஷினின் வாக்யூமால் இறந்த செல்களை அகற்றி சீரம் பூசுதல்

MDA மெஷினை செட் செய்து அதிலிருக்கும் வாக்யூமை பயன்படுத்தி முகத்தில் மெதுவாக வைத்து எடுக்கவும். முகப்பரு இருக்கும் இடங்களில் செய்யக்கூடாது. இதனால் இறந்த மற்றும் வறண்ட செல்கள் நீங்குவதை கண்கூடாக காணமுடியும். கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் மென்மையாக செய்யவேண்டும்.

ஓரிரு முறை இந்த வாக்யூமை முகம் முழுவதும் பயன்படுத்தவும். சிலருக்கு உதடு கருப்பாக இருந்தால் அங்கும் இந்த பாலிஷை செய்யலாம்.

பொதுவாகவே கழுத்துப்பகுதி மென்மையாக இருக்கும் என்பதால் கைகளால் நன்றாக ஸ்ட்ரெட்ச் செய்து பிடித்துக்கொண்டு மேலிருந்து கீழாக பாலிஷ் செய்யவும். நிறையப்பேருக்கு கழுத்துப்பகுதிகளில் கருமை இருக்கும். இந்த சிகிச்சை அதற்கு நல்ல தீர்வு கொடுக்கும்.


ஹைட்ரேஷன் ஷீட் மாஸ்க் மீது LED சிவப்பு லைட் வைத்தல்

மணப்பெண்கள் உடல் முழுவதும்கூட இந்த சிகிச்சையை செய்துகொண்டால் நிறமும் சற்று அதிகரிக்கும்.

இரண்டுமுறை பாலிஷிங் கொடுத்தபிறகு, டிஷ்யூ பேப்பரால் இறந்த செல்களை மென்மையாக துடைத்து எடுக்கவும். அதன்பிறகு வெட் டிஷ்யூ கொண்டு துடைக்கவும்.

இந்த சிகிச்சைக்குப் பிறகு சருமம் சற்று வறண்டுவிடும் என்பதால் சருமத்திற்கு ஏற்ற சீரம் பயன்படுத்தலாம். க்ளூட்டோதயான் போன்ற சரும நிறத்தை அதிகரிக்கும் சீரமை பயன்படுத்தினால் முகம் இன்னும் பளிச்சென இருக்கும்.


மாய்ச்சுரைஸர் மற்றும் சன் ஸ்கிரீன் தடவுதல்

சீரம் பூசியபிறகு அதன்மேல் ஹைட்ரேஷன் ஷீட் மாஸ்க் போடவேண்டும். மாஸ்க் மீது LED சிவப்பு லைட் வைத்தால் சருமம் ஹைட்ரேட் ஆவதுடன், கொலாஜன் அளவும் அதிகரிக்கும். 20 நிமிடங்கள் கழித்து LED லைட்டை எடுத்துவிட்டு, ஷீட் மாஸ்க்கையும் நீக்கிவிடவும். அதன்பிறகு சருமத்திற்கு சிறிது மசாஜ் கொடுத்து ரிலாக்ஸ் செய்யவும்.

இந்த சிகிச்சைக்குப் பிறகு சருமத்தின் தன்மைக்கு ஏற்றவாறு கட்டாயம் மாய்ச்சுரைஸர் மற்றும் சன் ஸ்கிரீன் போடவேண்டும்.

பிக்மெண்டேஷன் அதிகமாக இருப்பவர்கள் இதனை 2 அல்லது 3 சிட்டிங்குகள் செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Updated On 25 March 2024 6:27 PM GMT
ராணி

ராணி

Next Story