சமீப காலங்களில் ‘மெட்டர்னிட்டி போட்டோஷூட்’ என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரபலங்கள் மட்டும் போட்டோஷூட் செய்வது வழக்கமாக இருந்து வந்த நிலையில், இன்று காலத்தின் மாற்றத்தால், எல்லோருமே போட்டோஷூட் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக சொன்னால் மெட்டர்னிட்டி போட்டோஷூட் என்பது, முதல் மாதம் தொடங்கி ஒன்பது மாதமும் விதவிதமாக நடத்தப்படுகிறது. இந்த மாதிரியான மிகவும் முக்கியமான தருணங்களில் மேக்-அப் என்ற ஒன்று கட்டாயமாகிவிட்டது. மெட்டர்னிட்டி மேக்-அப் லுக் எப்படி செய்வது என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் லலிதா.
சருமத்தின் தன்மைக்கேற்ப மாய்ச்சுரைசரை போட்டுவிட்டு பிரைமரை முகம் முழுவதும் டேப் செய்தல்
மேக்-அப் போடுவதற்கு முன்பு முகத்தை நன்கு கழுவ வேண்டும். பின்பு முகத்தில் டோனர் போட வேண்டும். லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் லிப் பாம் போட வேண்டும்.
அடுத்ததாக மாய்ச்சுரைசரை சருமத்தின் தன்மைக்கு ஏற்ப அப்ளை செய்ய வேண்டும். சரியான மாய்ச்சுரைசரை போட்ட பிறகு பிரைமரை முகம் முழுவதும் டேப் செய்ய வேண்டும்.
முகப்பருவினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள், தழும்பு, கருவளையங்கள் அனைத்தையும் சீராக்க, முகத்தில் கன்சீலர் கொண்டு ஒரே மாதிரியான நிறத்திற்கு ப்ரஷ்ஷால் டேப் செய்ய வேண்டும். பிறகு லூஸ் பவுடரையும் முகம் முழுவதும் டேப் செய்ய வேண்டும்.
உடையின் நிறத்திற்கு ஏற்ப கண்களில் ஐ-ஷேடோ போடுதல்
அடுத்ததாக புருவங்கள் ஷேப்பாக இருக்க வெளியில் அவுட்லைன் போட்டு உள்ளே இடைவெளிகளை சரியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு செய்யும்போது பார்ப்பதற்கு புருவங்கள் அழகாக இருக்கும்.
அடுத்து ஐ-ஷேடோ. உடையின் நிறத்திற்கு ஏற்றவாறு நிறத்தை செலக்ட் செய்து ஒரு அவுட்லைன் போட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உள்பகுதியிலும் நிரப்ப வேண்டும்.
பின்பு ஐ-லைனர் போட வேண்டும். அதேபோல் கண்களுக்கு மேலும் கீழும் வாட்டர்லைனில் காஜல் கொண்டு வரைய வேண்டும். இறுதியாக ஐ-லேஷஷ் வைத்தால் கண் மேக்-அப் முடிந்தது.
லிப் அவுட்லைன் வரைந்து பின்னர் லிப்ஸ்டிக் போடுதல்
அடுத்ததாக ஃபவுண்டேசன் எடுத்து முகம் முழுவதும் டேப் செய்ய வேண்டும். கழுத்து பகுதியில் ஃபவுண்டேசனை ப்ரஷ் வைத்து டேப் செய்ய வேண்டும். ஃபவுண்டேசனை செட் செய்ய லூஸ் பவுடர் கொஞ்சமாக போட்ட பிறகு, ஹைலைட்டரை வைத்து, புருவம் மற்றும் கண்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப வேண்டும்.
தேவையான இடங்களில் காண்டோர் செய்ய வேண்டும். பிறகு சிம்மர், பிரான்ஸ் மற்றும் ப்ளஷ்ஷை கன்னங்கள், மூக்கு, தாடை பகுதிகளில் போடுவதால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
மெட்டர்னிட்டி மேக்-அப் லுக் ரெடி
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு லிப் பாம் அல்லது லிப் மாய்ச்சுரைசர் போட வேண்டும். லிப்ஸ் எடுப்பாக அழகாக தெரிய லிப் லைனர் போட்ட பிறகே லிப்ஸ்டிக் போட வேண்டும்.
முக்கியமாக லிப்ஸ்டிக் கலரைவிட லிப் லைனர் கலர் ஒரு ஷேட் அதிகமாக இருந்தால் பார்க்க நன்றாக இருக்கும்.
இறுதியாக செட்டிங் ஸ்பிரே அடித்தால் மெட்டர்னிட்டி மேக்-அப் லுக் ரெடி!