இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நம்மில் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் முடியை பராமரிப்பதுதான். எந்த வகையான ஹேர் ஆயில், ஷாம்பு, கண்டீஷனர், ஹேர் ஸ்பா கிரீம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது என்பதில் பல குழப்பம் இருக்கும். தலை முடியைப் பராமரிப்பதற்கு வெளியில் செய்யப்படும் பராமரிப்புகள் மட்டுமின்றி உணவின் மூலம் எடுக்கும் ஊட்டச்சத்துக்களும் அவசியம். தலை குளிக்கும்போது முக்கியமாக ஷாம்பு பயன்படுத்தி தலையை வாஷ் செய்ய வேண்டும். அடுத்ததாக கண்டீஷனர், சீரம் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு முறையாக தலை முடியை பராமரிக்கும் போது எந்தவிதமான பாதிப்பும் தலை முடிக்கு ஏற்படாது. மேலும் இரும்புச்சத்து நிறைந்த நட்ஸ், பாதாம், நெல்லிக்காய் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் Dry and Frizzy தலை முடியை எப்படி மிருதுவாக்கலாம் என சொல்லிக்கொடுத்து விளக்குகிறார் அழகு கலை நிபுணர் மிஷல்.

செயல்முறை :

* முடியில் எண்ணெய் பிசுக்கு இருந்தால், முதலில் ஆயில் ரிமூவ் ஷாம்பு பயன்படுத்தி தலையை வாஷ் செய்ய வேண்டும். எப்போதும் ஷாம்புவை தேவையான அளவுக்கு எடுத்து தண்ணீரில் கொஞ்சமாக கரைத்து, பிறகே தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். 2 நிமிடங்களுக்கு மேல் தலையில் ஷாம்பு இருப்பதை தவிர்க்க வேண்டும். டவல் வைத்து தலையில் இருக்கும் தண்ணீரை நன்கு துடைத்துவிட வேண்டும்.


ஆயில் ரிமூவ் ஷாம்பு பயன்படுத்தி ஹேர் வாஷ் செய்யும் காட்சி

* வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிப்பது அவசியம். தலையில் பொடுகு, இதர பிரச்சினை இருப்பவர்கள் வாரத்திற்கு மூன்று முறை தலைக்கு குளிப்பது நல்லது.

* அடுத்ததாக ஃபிரிஸ்ஸி ஹேர் மாஸ்க் மற்றும் சீரம் இரண்டையும் கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். தலை முடியை சிறு சிறு பகுதிகளாக பிரித்து, மாஸ்க், சீரம் கிரீம்களை முடியில் மட்டும் படும்படி அப்ளை செய்ய வேண்டும்.

* கிரீம் அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு தலைக்கு நன்கு மசாஜ் கொடுக்க வேண்டும். மசாஜ் செய்யும்போது, தலை, கழுத்து, தோள்பட்டை என எல்லா இடத்திலும் செய்ய வேண்டும்.

* அடுத்ததாக ஒரு டவல் எடுத்து சுடு தண்ணீரில் நனைத்து நன்கு பிழிந்து எடுத்து தலையில் 5 நிமிடங்களுக்கு கட்டிவிட வேண்டும். 5 நிமிடம் கழித்து தண்ணீரில் நன்கு வாஷ் செய்ய வேண்டும்.


ஃபிரிஸ்ஸி ஹேர் மாஸ்க் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்தல்

* ஹேர் வாஷ் செய்து டவல் வைத்து துடைக்க வேண்டும். ஈரத்தன்மை உள்ள முடியை லேயர் கட் செய்ய வேண்டும்.

* லேயர் கட் செய்து ப்ளோ டிரையர் வைத்து முடியை செட் செய்ய வேண்டும். இப்போது சில்கி & ஸ்மூத் ஹேர் பார்க்க நன்றாக இருக்கும்.

Updated On 2 Sep 2024 6:32 PM GMT
ராணி

ராணி

Next Story