இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

திருமணம் என்றாலே ஆடைக்கும், ஒப்பனைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்னவோ மணப்பெண்கள்தான். மணமகன்களோ முன்பெல்லாம் முகத்திற்கு வெறும் பவுடர் மட்டும் போட்டுக்கொண்டு மணப்பெண்ணுக்கு ஜோடியாக நிற்பார்கள். காலங்கள் மாற மாற மணப்பெண்ணுக்கு நிகராக தானும் ஆடையிலும், ஒப்பனையிலும் இணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மணமகன்களிடையே இப்போது வளர்ந்துள்ளது. அதனால்தான் தற்போது வெறும் சலூன் மட்டுமில்லாமல் ஆண்களுக்கென்று தனி அழகு நிலையமே வந்துவிட்டது. அப்படி மணப்பெண்ணுக்கு ஈடு கொடுக்கும் க்ரூம் மேக்கப் செய்யும் முறைகளை எளிமையான முறையில் விளக்கியுள்ளார் அழகு கலை நிபுணர் பிரியா.

மேக்கப்பின் முதல் ஸ்டெப்பாக ஒரு ஈர துணியை பயன்படுத்தி நன்றாக சுத்தமாக முகத்தை கிளென்ஸ் செய்ய வேண்டும். அதற்கடுத்து உலர்ந்த துணியை பயன்படுத்தி முகத்தை சுத்தமாக துடைத்துக்கொள்ள வேண்டும்.

முகத்தை கிளென்ஸ் செய்த நிலையில் மாய்ச்சுரைஸர் மற்றும் பிரைமரை சுழற்சி முறையில் முகம் முழுக்க தடவ வேண்டும். மாய்ச்சுரைஸர் மற்றும் பிரைமரை பிரஷ்ஷை பயன்படுத்தி தடுவுவதை காட்டிலும் கைகளை பயன்படுத்தி தடவுவது நல்லது. அப்போதுதான் க்ரீம் சருமத்தில் நன்றாக பிளெண்டாகும். ஆண்களுக்கு ஆயிலி லுக் கொடுத்தால் நன்றாக இருக்காது என்பதால் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு பிரைமரை கொஞ்சம் அதிகமாக பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஆண்களுக்கு மேட்டி லுக் கிடைக்கும்.


தலைமுடியை செட் செய்தல்

அடுத்ததாக கன்சீலர் என்று சொல்லப்படும் கலர் கரெக்டரை கொண்டு முகத்தில் எங்கெல்லாம் கருமை இருக்கிறதோ அவ்விடத்திலெல்லாம் ஆரஞ்சு கரெக்டரை பயன்படுத்த வேண்டும். ஆரஞ்சு ஷேட் இல்லாதவர்கள் அதை விட டார்க்கான கரெக்டரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

கரெக்டர் பயன்படுத்தியதை தொடர்ந்து சருமத்தின் நிறத்திற்கேற்ற ஃபவுண்டேஷன் கொண்டு முகம் முழுவதும் ஒரு பிரஷ்ஷை உபயோகித்து சமமாக பரப்ப வேண்டும். அடுத்து ஃபவுண்டேஷன் பவுடர் போட வேண்டும். ஃபவுண்டேஷன் போட்டதற்கு பின் ஒரு ஈர துணி அல்லது வெட் டிஷ்யூ கொண்டு புருவம், மீசை மற்றும் தாடியிலிருக்கும் பவுடரை துடைத்து விடவும்.


க்ரூம் லுக்கிற்கான தாடி - மீசை ஷேப் செய்தல்

ஸ்மார்ட்டான லுக் அமைய கிளீன் ஷேவ் செய்யாதவர்களுக்கு, ஐ-பெலட்டிலிருந்து லைட் கிரே நிறத்தை கொண்டு முடியில்லாத இடத்தில் தடவி கோம்ப் செய்தால், தாடியும்-மீசையும் சரியான வடிவத்தில் இருக்கும். அது முகத்திற்கு நல்ல லுக் கொடுக்கும். அதேபோல் தாடி, மீசை மற்றும் தலையில் வெள்ளை முடி இருந்தால் மஸ்காரா தடவி அதை மறைத்து விடலாம். அதுவே க்ரே முடி அதிகமாக இருந்தால் கருப்பு ஸ்பிரே அடித்து அதை டிஷ்யூவால் பரப்புவது போல செய்து ட்ரையரை பயன்படுத்தினால் தலைமுடி செட் ஆகிவிடும்.

இறுதியாக உதட்டுக்கு டின்ட் எதுவும் கொடுக்காமல் லிப் க்ளாஸ் மட்டும் லேசாக தடவி கொள்ளலாம். மணமகன், மேக்கப்பை விரும்புபவர்களாக இருந்தால் கண்களின் நடுப்பகுதியில் கண்மை வைக்கலாம். வெறும் சில நிமிடங்களில் ஸ்மார்ட்டான க்ரூம் லுக்கில் மணமகன் ரெடி!

Updated On 12 Dec 2023 12:11 AM IST
ராணி

ராணி

Next Story