இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கார்குழலி என நீளமான கூந்தலை கொண்ட பெண்களை கவித்துவமாக கூறலாம். கார் என்றால் மேகம், குழல் என்றால் கூந்தல், மேகம் போன்ற அழகான கூந்தலை உடையவள் என்று பொருளாகும். எல்லோருக்குமே நீளமான கூந்தலின் மீது அதீத காதல் உண்டு. கருப்பான, அழகான கூந்தல் இருக்க வேண்டும் என பலருக்கும் ஆசை இருக்கும். அப்படி எல்லோரையும் கவரக்கூடிய இந்த முடியை பராமரிப்பது மிகவும் கடினமான வேலையாகத்தான் இருக்கிறது இக்கால தலைமுறையினருக்கு. வெயில் காலத்தில் ஏற்படும் முடி வறட்சியை தடுக்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஹேர் கண்டிஷனர் செய்வது எப்படி என விளக்குகிறார் அழகு கலை நிபுணர் ரோகிணி.


செய்முறை:

செம்பருத்தி பூவை காம்பு மற்றும் மகரந்தத்தாள் நீக்கி, நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்த செம்பருத்தி பூவை, இரவு முழுவதும் ஊற வைத்து, அந்த நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளலாம். பாதாம் பிசினை, தனியாக நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். சோற்றுக் கற்றாழையை தோல் நீக்கி, அதன் சதையை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, பாதாம் பிசின் மற்றும் ஊற வைத்த செம்பருத்தி இதழ்களை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த இந்த கலவையை, செம்பருத்தி ஊற வைத்த நீரில் கலக்க வேண்டும்.

இதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள சோற்றுக் கற்றாழையையும் அரைத்து சேர்த்து நன்றாக கலந்தால் சூப்பரான ஹேர் கண்டிஷனர் வீட்டிலேயே ரெடி. இந்த ஹேர் கண்டிஷனரை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம்வரை பயன்படுத்தலாம்.


செம்பருத்தி பூக்களை நீரில் கழுவி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்

செம்பருத்தி பூவின் நன்மைகள்:

• செம்பருத்தியை தங்க பஸ்பம் என்று அழைக்கிறார்கள்.

அந்த அளவுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது செம்பருத்தி.

இந்தியா, இலங்கையில் செம்பருத்தி அதிகமாக காணப்படுகிறது.

செம்பருத்தி பூ இதயத்திற்கு எந்த விதமான நோயும் வராதவாறு பாதுகாக்கிறது. செம்பருத்தி இதழ்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.


பாதாம் பிசினை நீரில் ஊறவைப்பது மற்றும் செம்பருத்தியிலிருந்து சாறு எடுப்பது

• ஜூஸ் செய்தும் பருகலாம்.

செம்பருத்தி பூ இதயத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாது, படபடப்பு, இரத்த குழாய் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

• முடி உதிர்வதையும் செம்பருத்தி பூ கட்டுப்படுத்துகிறது.

அடர் கருப்பான, நீண்ட கூந்தலுக்கு செம்பருத்தி பெரிதும் உதவுகிறது.

சோற்றுக் கற்றாழையின் நன்மைகள்:


சோற்றுக் கற்றாழையை பயன்படுத்தும் முறை

• சோற்றுக் கற்றாழை முகம், முடி, தோல் பராமரிப்புக்கு மட்டுமின்றி உள்ளுறுப்புகள் பாதுகாப்பாக இருக்கவும் பேருதவியாக இருக்கிறது.

உடல் உஷ்ணத்தை தவிர்க்கவும், புத்துணர்ச்சியின் தூண்டுகோலாகவும் சோற்றுக் கற்றாழை செயல்படுகிறது.

கற்றாழையை தோல் நீக்கி, அதன் சதையை மட்டும் எடுத்து நன்கு கழுவி, பிறகு மோரில் போட்டு, மிக்ஸியில் அரைத்து சிறிது உப்பு கலந்து குடித்தால் உடல் சூடு குறையும்.

குடல் புண்களை சரி செய்வதுடன் செரிமான கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் கற்றாழை உதவுகிறது.

பாதாம் பிசினின் பயன்பாடும், நன்மைகளும்:


பாதாம் பிசின், கற்றாழை, செம்பருத்தி இதழ்கள் சேர்த்து அரைத்த கலவையை பூ ஊறவைத்த தண்ணீருடன் கலக்குதல்

• இலையுதிர் காலத்தில் பாதாம் மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின் உடல் நன்மைக்கு பலவகையில் உதவுகிறது. இதில் உள்ள புரதம் மற்றும் மினரல்கள் இரண்டும், சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன.

பாதாம் பிசின் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. இதனை உட்கொள்வதால் இதயம் வலுப்பெறும்.

பாதாம் பிசினை ஊற வைத்து அனைத்து விதமான பழச்சாறுடனும் கலந்து குடிக்கலாம்.

பாதாம் பிசினை அன்றாடம் உட்கொண்டால், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராகி எளிதில் கர்ப்பம் தரிக்க உதவிபுரியும்.


செம்பருத்தி பூ, சோற்றுக் கற்றாழை மற்றும் பாதாம் பிசின் கலந்து தயாரிக்கப்பட்ட ஹேர் கண்டிஷனர்

• இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சருமத்தில் உள்ள காயங்களை விரைந்து குணப்படுத்துகின்றன. சரும அழற்சி, வீக்கம், முகப்பருக்கள்,தொற்றுகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளை குணப்படுத்துகின்றன.

Updated On 29 April 2024 11:51 PM IST
ராணி

ராணி

Next Story