இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மும்மதங்களிலும் மணமகள்களுக்கு செய்யப்படும் அலங்காரம் குறித்து, தொடர்ச்சியாக 3 வாரங்களுக்கு பார்க்க இருக்கிறோம். இந்த வாரம் கிறிஸ்டியன் வெட்டிங் லுக் பார்க்கப் போகிறோம். அடுத்துவரும் வாரங்களில் இந்து மற்றும் இஸ்லாமிய திருமணங்களில் செய்யப்படும் பிரைடல் மேக்கப்பை பார்ப்போம். கிறிஸ்டியன் வெட்டிங் என்று சொன்னதும் நம் எல்லோருக்கும் இயக்குநர் GVM படமான விண்ணைத்தாண்டி வருவாயாவில் வரும் ஜெசி, கார்த்திக்; இயக்குநர் அட்லீயின் படமான ராஜா ராணியில் வரும் ரெஜினா, ஜான்தான் பெரும்பாலும் நியாபகத்திற்கு வருவார்கள். கிறிஸ்டியன் திருமணத்தை பொறுத்தவரை, ஒருவருக்கு ஒருவர் கல்யாணம் பண்ணிக்கொள்ள விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என சபையில் அனைவரின் முன்னிலையிலும் கேள்வி எழுப்பப்படும், இருவரும் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே திருமணம் செய்வார்கள். சொந்த பந்தத்தில் யாரேனும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் கூட தெரிவிக்கலாம். அனைவரின் சம்மதத்தின் அடிப்படையிலேயே திருமணம் நடைபெறும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில் ஆடை, அலங்காரம் என தன்னை தானே மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என மணமகள்கள் நினைப்பதுண்டு. அந்த வகையில் கிறிஸ்டியன் வெட்டிங் மேக்-அப் லுக் எப்படி நேர்த்தியாக செய்யலாம் என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் அழகு கலை நிபுணர் லலிதா.

செயல்முறை:

மேக்-அப் போடுவதற்கு முன் முதலில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். மேக்-அப் போடுவதில் முதல் மூன்று படிநிலைகள் மிகவும் முக்கியமானவை. க்ளென்சர், டோனர், மாய்ச்சுரைசர் ஆகிய மூன்றும் அத்தியாவசியம்.


முகத்திற்கு மாய்ச்சுரைசர் போடும் காட்சி

♦ முகம் கழுவியதும், டோனர் போட வேண்டும். பின்னர் சருமத்தின் தன்மைக்கேற்ப மாய்ச்சுரைசர் தேர்வு செய்து அப்ளை செய்ய வேண்டும். எண்ணெய் பிசுக்கான சருமத்திற்கு குறைந்த மாய்ச்சுரைசர் போட வேண்டும்.

♦ அடுத்ததாக பிரைமரை முகம் முழுவதும் டேப் செய்ய வேண்டும். புருவங்கள் சிலருக்கு மெலிந்து அடர்த்தி அற்று இருக்கும். அவர்களுக்கு முகத்தின் வடிவத்திற்கு ஏற்ப அவுட்லைன் போட்டு பின்னர் உள் பகுதியில் உள்ள இடைவெளிகளை நிரப்ப வேண்டும்.


ஐ-ஷேடோவுக்கு அவுட்லைன் போடும் காட்சி

♦ ஐ-ஷேடோ போடுவதற்கு முன், கண்களில் கருமை இருந்தால் கன்சீலர் வைத்து டேப் செய்ய வேண்டும். பிறகு அவுட்லைன் போட்டு ஐ-ஷேடோ போட வேண்டும். அடுத்து ஐ-லைனர், காஜல் போட்டால் ஐ மேக்-அப் முடிந்தது. சிலருக்கு கண் இமைகள் அடர்த்தி குறைவாக இருக்கும் பட்சத்தில், ஐ-லாஷஸ் வைக்கலாம்.

♦ அடுத்ததாக ஃபவுண்டேஷனை சரும நிறத்திற்கு ஏற்றவாறு எடுத்து முகம் முழுவதும் டேப் செய்ய வேண்டும். பிறகு கன்சீலர் வைத்து தேவையான இடங்களில் டேப் செய்ய வேண்டும்.

♦ பின்னர் லூஸ் பவுடர் வைத்து முகத்தில் ஃபவுண்டேஷனை செட் செய்ய வேண்டும்.


லிப்ஸ்டிக் போடுவது குறித்த விளக்கப்படம்

♦ லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்னாள் லிப் மாய்ச்சுரைசர் போட வேண்டும். மாய்ச்சுரைசர் தடவியபிறகே லிப்ஸ்டிக்கை அப்ளை செய்ய வேண்டும். இறுதியாக செட்டிங் ஸ்பிரே அடித்தால் கிறிஸ்டியன் ஸ்டைல் வெட்டிங் மேக்-அப் ரெடி!

Updated On 20 May 2024 6:27 PM GMT
ராணி

ராணி

Next Story