இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அழகு கலைகளில் ஒன்றாக நெயில் ஆர்ட் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. தன்னைத்தானே அழகு படுத்திக்கொள்வது என்பது மிகவும் அவசியமானது. அந்த வகையில் மேக்கப், டிரஸ் பட்டியலில் நெயில் ஆர்ட்டும் இணைக்கப்பட்டுவிட்டது. சாலிட் கலர்ஸ், ஃபிரெஞ்ச் நெயில்ஸ், கேட் ஐ நெயில்ஸ், கிரேடியண்ட் நெயில்ஸ், எக்ஸ்டென்ஷன்ஸ் என பல வகையில் நெயில் ஆர்ட் உள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமானால், ஃபிரெஞ்ச் நெயில் பல விதங்களில் தற்போது டிசைன் செய்யப்படுகிறது. ஒயிட் பாலிஷ் வைத்து மட்டுமே முன்பெல்லாம் ஃபிரெஞ்ச் நெயில் செய்வார்கள், ஆனால் தற்போது நிறைய கலர், கிளிட்டர் என பலவிதங்களில் ஃபிரெஞ்ச் நெயில் மாற்றம் பெற்றுள்ளது. நெயில் ஆர்ட்களில் ஒன்றான "Cat Eye" டிசைன் எப்படிபோடுவது என சொல்லிக்கொடுத்து விளக்குகிறார்நெயில் ஆர்டிஸ்ட் சுனிதா.

செயல்முறை :

முதலில் நகம் சிறிதாக இருக்கும் பட்சத்தில் சரியாக கட் செய்து, நெயில் ஷேப் சரியாக இருப்பது போல ஃபைல் செய்ய வேண்டும். பிறகு கியூட்டிகள் சாஃப்ட்னர் அப்ளை செய்து ஒரு சில நொடிகள் கழித்து கியூட்டிகள் புஷ் செய்ய வேண்டும். அடுத்ததாக எக்ஸ்ட்ரா கியூட்டிகளை கட் செய்துவிட வேண்டும்.


கியூட்டிகள் சரி செய்யும் முறை

நெயில் பஃபர் பிளாக் வைத்து நெயிலில் உள்ள ஷைனை எடுக்க வேண்டும். நெயில் சற்று சொரசொரப்பாக இருந்தால் ஜெல் பாலிஷ் போடும்போது நீண்ட நாட்கள்வரை இருக்கும். நகத்தில் தூசுகளை IP வைத்து துடைத்து எடுக்க வேண்டும்.

அடுத்ததாக ஈசி பான்ட் அப்ளை செய்ய வேண்டும். அது சிறிது நேரத்தில் ஆவியானதும், பேஸ் கோட் அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்து 20 நொடிகள் LED லைட்டில் வைத்து எடுக்க வேண்டும்.


மேக்னட் வைத்து "கேட் ஐ" டிசைன் போடும் காட்சி

அதன் பிறகு நெயிலின் வெட் டெக்ஸ்ச்சரை ரிமூவ் செய்து, பிளாக் கலர் நெயில் பாலிஷ் அப்ளை செய்ய வேண்டும். LED லைட்டில் வைத்து க்யூர் ஆனதும் இரண்டாவது கோட்டிங் கொடுக்க வேண்டும்.


முழுமையாக முடிக்கப்பட்ட "கேட் ஐ" டிசைன்

சில்வர் கலர் கிளிட்டர் நெயில் பாலிஷ் அப்ளை செய்து, மேக்னட் வைத்து கேட் ஐ டிசைன் போட வேண்டும். ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கு பிறகும் LED லைட்டில் க்யூர் செய்துவிட வேண்டும். இறுதியாக டாப் கோட் கொடுத்தால் கேட் ஐ டிசைன் நெயில் ஆர்ட் முடிந்தது.

Updated On 9 Sep 2024 4:21 PM GMT
ராணி

ராணி

Next Story