இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பொதுவாக வெளியிலோ அல்லது வெயிலிலோ சென்றாலோ அல்லது ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு சென்றாலோ அல்லது தண்ணீர் மாறுபட்டாலோ சருமம் கருமையாக மாறுகிறது. சருமத்தை மென்மையாக பொலிவாக மாற்ற, கருமையான சருமம் கொண்டவர்களும், சூரிய ஒளியால் சருமம் கருமையானவர்களும் வீட்டிலேயே சுலபமான முறையில் ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்று டிப்ஸ் அளித்துள்ளார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா ரவி.

முகம் பொலிவாக இருக்க வீட்டிலேயே செய்யக்கூடிய காபி ஃபேஸ் பேக்:

  • முதலில் காட்டன் துணியை ஈரமாக்கி முகத்தை நன்றாக துடைக்க வேண்டும்.
  • அடுத்ததாக 2 வைட்டமின் ஈ (Vitamin E) காப்ஸ்யூலை கட் செய்து அதில் உள்ள எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யும்போது இதை கண் புருவம் மற்றும் இமைகளில் தடவலாம். இப்படி செய்வதன் மூலம் புருவம் நன்றாக வளரும். இதை வாரத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்வதன் மூலம் சருமம் மென்மையாகும்.

பேக் போடுவதற்கு முன்பு முகத்தை தயார் செய்தல்

  • 5 முதல் 10 நிமிடங்களுக்கு எண்ணெயால் முகத்தை மசாஜ் செய்த பின்னர், காபி டிகாக்‌ஷன் (காபி தயாரித்த பிறகு கீழே படிந்திருக்கும் படிமம்) 2 டீஸ்பூன் எடுத்து, அதில் ¼ டீஸ்பூன் அளவு நாட்டுச் சர்க்கரை, ¼ டீஸ்பூன் ஆலிவ் ஆயில், ¼ டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 அல்லது 3 சொட்டு வெண்ணிலா அல்லது லாவெண்டர் அல்லது ரோஸ் எசன்ஸ் ஆயில் சேர்த்து கலக்க வேண்டும்.
  • கலக்கிய அந்த பேக்கை 2 முதல் 3 நிமிடங்கள் கழித்து முகத்தில் தடவலாம். கண் அடிப்பகுதியில் மட்டும் இதை தடவுவதை தவிர்த்து விடலாம். முகத்தில் காபி ஸ்க்ரப் போட்ட பிறகு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேடை 10 நிமிடங்கள் கண்கள்மேல் வைத்து ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

காபி ஃபேஸ் பேக்

  • 10 நிமிடங்கள் கழித்து ஒரு விரலால் முகம் முழுக்க சர்குலர் மோஷனில் தேய்க்க வேண்டும். பின்னர் தண்ணீரைத் தொட்டு கைகளால் மசாஜ் செய்தவாறே பேக்கை நீக்க வேண்டும். இறுதியாக ஈரத்துணி உபயோகித்து முகத்தை முழுவதும் துடைத்து சுத்தம் செய்யவேண்டும். இந்த ஃபேஸ் பேக் அனைத்து சருமத்தினருக்கும் பொருந்தும். இதை உடல் முழுவதும் கூட தேய்க்கலாம்.

காபி ஃபேஸ் பேக் உபயோகிப்பதன் பலன்:

  • சரும கருமை எளிதில் நீங்கும்.
  • சருமத்தை மென்மையாக்கும்.
  • இறந்த செல்களை அகற்றும்.
  • உடலில் கொழுப்புள்ள இடத்தில் தடவினால் கொழுப்பு குறையும்.
  • உடல் எடையை குறைக்க உதவும்.
Updated On 26 Sept 2023 12:25 AM IST
ராணி

ராணி

Next Story