இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வெயிலில் சுற்றும் பலருக்கு சருமம் கருமையாதல், கரும்புள்ளிகள் வருதல் போன்றவை சகஜமாக இருக்கிறது. இதுகுறித்து பலரும் கவலைபட்டாலும் கருமையை எப்படி நீக்க வேண்டும்? சருமம் கருமையாதலை தடுப்பதற்கான வழிகள் குறித்து விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஈவ்லின்.

கரும்புள்ளிகள் மற்றும் சரும கருமையாவதற்கான காரணங்கள் என்னென்ன?

ஒவ்வொரு உடலுக்கும் மெலனின் தன்மை ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். மெலனினின் தன்மை அதிகரிக்கும்போதுதான் கரும்புள்ளிகள் மற்றும் சரும கருமை ஏற்படுகிறது.

கரும்புள்ளிகள் மற்றும் சரும கருமையை குறைப்பது எப்படி?

முதற்கட்டமாக முகத்தை டி - டான் (D -Tan) செய்ய வேண்டும். ஒரே ஒருமுறை டி - டான் செய்வதன் மூலம் கரும்புள்ளிகள் நீங்காது. இதைத் தொடர்ந்து செய்வதன்மூலம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.


டி - டான் பேக்

முகத்தை முதலில் ஈரத்துணியை வைத்து நன்றாக துடைக்க வேண்டும். பின்னர் க்ளென்சரை மசாஜ் செய்வதுபோல் தடவி முகத்தில் இருக்கும் அழுக்கை சுத்தம்செய்ய வேண்டும்.

முகத்தை க்ளென்ஸ் செய்த பின்னர் ஒரு பிரஷ்ஷை உபயோகித்து முகத்தில் டி-டான் பேக்கைத் தடவத் தொடங்கலாம். 15 - 20 நிமிடங்களுக்கு காயவிட்டு மீண்டும் முகத்தை ஈரத்துணி அல்லது டிஷ்யூ பயன்படுத்தி முகத்தை நன்றாக துடைக்க வேண்டும்.

அடுத்ததாக முகத்தை ஸ்கிரப் செய்ய வேண்டும். முக்கியமாக சருமத்திற்கு ஏற்ற ஸ்கிரபை தேர்வு செய்து உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால் கரும்புள்ளிகள் அதிகமாகிவிடும். 5 நிமிடங்களுக்கு ஸ்கிரப் செய்து விட்டு ஈரத்துணியால் துடைத்த பின்னர் நீராவி பிடிக்க (Steam) வேண்டும்.

காட்டன் அல்லது Eye Pad கொண்டு கண்களை மூடிய பின்னரே ஸ்டீம் செய்ய வேண்டும். அதன்பிறகு முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அதற்கென்றே பிரத்யேகமாக உள்ள ஊசி அல்லது உபகரணம்கொண்டு அகற்ற வேண்டும்.


காட்டனால் கண்களை மூடி வைட்டமின் - சி சீரம் தடவ வேண்டும்

கரும்புள்ளிகளை அகற்றிய பின்னர் வைட்டமின் - சி சீரம் உபயோகித்து சுமார் 15 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தை ஈரத்துணியால் துடைத்துவிட்டு வைட்டமின் - சி பேஷியல் பேக் போட்டு 10 நிமிடங்களுக்கு முகத்தை காயவிட்டு, இறுதியாக ஈரத்துணியால் துடைத்தால் முகம் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்கும். இப்படி தொடர்ந்து செய்தால் முகத்திலிருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் சரும கருமைகள் நிச்சயம் குறையும்.

இதுதவிர வீட்டிலேயே முல்தானி மேத்தியில் சிறிது பீட்ரூட் சாறு சேர்த்து தடவி வருவதால், கரும்புள்ளிகள் மற்றும் சரும கருமைகள் நீங்கும். வெளியில் செல்லும்போது வைட்டமின் - சி சீரம் அல்லது வைட்டமின் - சி சன் ஸ்கிரீன் உபயோகித்தல் நல்லது.

Updated On 9 Oct 2023 7:02 PM GMT
ராணி

ராணி

Next Story