இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

எந்த நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும், ஏன் வீட்டிலேயே இருந்தாலும்கூட பெண்கள், ஆண்கள் என்று இருவரும் தங்களை அழகுபடுத்திக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பொருள்தான் ஃபேஸ்பேக். கடைகளில் வாங்கினாலும் அல்லது வீட்டிலேயே தயாரித்தாலும் உடனடியாக ரிசல்ட் தெரியவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால், பலமுறை பயன்படுத்தினாலும் சிலருக்கு நல்ல ரிசல்ட் தெரிவதில்லை. அதற்கு காரணம் ஃபேஸ்பேக்குகளை முறையாக அப்ளை செய்யாததுதான் என்கிறார் அழகு கலை நிபுணர் வசந்தி. மேலும் ஃபேஸ்பேக்கை எப்படி முறையாக பயன்படுத்துவது என்றும் விளக்குகிறார் அவர்.

ஃபேஸ்பேக் பயன்படுத்தும் முறை

முகத்தில் நாம் எதை பயன்படுத்துவதற்கு முன்னரும் முதலில் முகத்தை கிளென்ஸ் செய்ய வேண்டும். கிளென்ஸ் செய்வதன் மூலம் முகத்திலிருக்கும் எண்ணெய் தன்மை நீங்கி இறந்த செல்கள் அகலும். குறிப்பாக கிளென்ஸர் பயன்படுத்தும் போது அதை அழுத்தி தேய்க்காமல் பொறுமையாக, மென்மையாக சுழற்சி முறையில் மசாஜ் செய்தவாறு மட்டுமே தடவ வேண்டும். கிளென்ஸர் பயன்படுத்தினால்தான், அதற்கு பின் போடும் மேக்கப்பானது முகத்தில் தங்கும். மேலும், அதற்குரிய சிறந்த வெளியீடு கொடுக்கும்.


முகத்தை கிளென்ஸ் செய்யும் முறை

கிளென்ஸர் பயன்படுத்தி முகத்தில் நன்றாக மசாஜ் செய்த பின்னர் ஒரு ஈரத்துணி அல்லது ஈர ஸ்பாஞ்ஜை வைத்து அதை முழுவதுமாக துடைக்க வேண்டும். நன்றாக முகத்தை துடைத்த பின்னர் நமக்கு பிடித்த, நம் சருமத்திற்கு ஏற்ற ஏதேனும் ஒரு ஃபேஸ் பேக்கை பிரஷ் பயன்படுத்தி கண்களின் மேற்பகுதி, கீழ் பகுதி என்று முகம் முழுவதுவுமாக தடவிக் கொள்ளலாம். உலர்ந்த சருமம் இருப்பவர்களுக்கு எளிதில் பேக் காய்ந்து விடும். மற்றவர்கள் குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு பேக்கை காயவைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முகத்தில் தடவிய பேக் நன்றாக காய்ந்தவுடன் கைகளை தண்ணீரில் தொட்டு முகத்தை சுழற்சி முறையில் மென்மையாக மசாஜ் செய்து துடைக்க வேண்டும். லேசான மசாஜ் செய்த பிறகு ஒரு ஈர ஸ்பான்ஜ் அல்லது ஈரத்துணி பயன்படுத்தி கண், மூக்கு, வாய்ப்பகுதி என்று முகத்தை முழுவதுமாக துடைத்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் துடைத்த பின்னர் வெறும் தண்ணீரில் முகத்தை கழுவிக்கொள்ளலாம்.


ஃபேஸ் பேக் போடும் சரியான முறை

அடுத்ததாக நம் சருமத்திற்கேற்ற மாய்ச்சுரைசரை, பேக்கை சுத்தமாக நீக்கிய பின்னர் முகம் முழுவதும் தடவ வேண்டும். அப்போதுதான் முகம் பளபளப்பாகவும் பிரைட்டாகவும் தெரியும். முகத்திற்கு பளபளப்பை தரும் இந்த ஃபேஸ்பேக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு முதல் நாள் அல்லது வாரத்திற்கு இருமுறை அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.

ஃபேஸ்பேக் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

  • ஃபேஸ்பேக் பயன்படுத்துவதன் மூலம் டல்லான முகமும் பிரைட்டாக தெரியும்.
  • மெலஸ்மா என்று சொல்லக்கூடிய கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் நீங்கும்.
  • சருமம் ஹைட்ரேட் ஆக்கப்பட்டு முகம் பொலிவாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
  • ஃபேஸ்பேக் மாசு நிறைந்த சூழலிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்கும். குறிப்பாக களப்பணியில் இருப்பவர்களுக்கு இது பெரிதும் உதவும்.
Updated On 1 Jan 2024 11:59 PM IST
ராணி

ராணி

Next Story