இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பட்டுப்புடவை கட்டுவது என்பது மட்டுமல்ல, அதை நாள் முழுவதும் பராமரிப்பது என்பதும் சற்று கடினம்தான். அந்த வகையில் அழகாக "Saree Drape" செய்வதும் தற்போது அழகு கலைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. தொழில் தொடங்கும் ஐடியா இருந்தால் அதற்கு மிகவும் அருமையான துறையாக "Saree Draping" இருக்கிறது. அதற்கு காரணம், திருமணம் மட்டுமின்றி தினசரி பயன்பாட்டில் கூட புடவையை நேர்த்தியாக கட்டவேண்டும் என பலரும் நினைப்பதுதான். எனவே புடவையை ப்ரீ ப்ளீடிங் மற்றும் பாக்ஸ் ஃபோல்ட்டிங் செய்வது எப்படி என்பதுடன், பாக்ஸ் ஃபோல்ட்டிங் செய்த புடவையை எப்படி எடுத்து கட்டுவது என்பது குறித்தும், சொல்லிக்கொடுத்து விளக்கமளிக்கிறார் அழகு கலை நிபுணர் மிஷல்.

செயல்முறை :

பட்டுப்புடவையை ப்ளீட்ஸ் செய்வதற்கு முன்பு, புடவை முழுவதும் ஒரு முறை அயன் செய்து கொள்ள வேண்டும்.

அவரவர் உடல் வாகுக்கு ஏற்ப ப்ளீட்ஸின் அகலம் இருக்க வேண்டும். முதலில் புடவையின் முந்தி எடுத்து, 8 முதல் 9 ப்ளீட்ஸ் எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு ப்ளீட்ஸையும் இரண்டு இன்ச் என கைவைத்து எடுத்தால் எளிதாக எடுக்க முடியும்.

முதலில் முந்தியின் கீழ்ப்பகுதியில் ப்ளீட்ஸ் எடுக்க முடியவில்லை என்றால் மேலிருந்து எடுத்து, கடைசியாக கீழே எடுக்கலாம்.

முந்தி மற்றும் மேல்பகுதியை பின் செய்துவிட்டு பின்னர் இடுப்புப் பகுதிக்கு எடுக்க வேண்டும். இடுப்புச் சுற்றளவின் அளவிற்கு புடவையில் அளந்து அதை விட்டுவிட்டு கீழ்ப்பகுதி ப்ளீட்ஸை எடுக்க வேண்டும்.

ப்ளீட்ஸ் கையில் நிற்காவிட்டால், முதல் ப்ளீட்டில் பின் செய்து கொள்ளலாம். மேலும் ப்ளீட்ஸை ஒன்றன்மேல் ஒன்றாக வைக்காமல் பக்கத்தில் சற்று இடைவெளி விட்டுவிட்டு வைத்து, பிறகு சேர்த்து பின் செய்து கொள்ளலாம்.


மேல்பகுதி ப்ளீட்ஸை முக்கோண வடிவில் வைத்து அயன் செய்ய வேண்டும்

அடுத்ததாக முந்தியை அயன் செய்தபிறகு உடலின் மேல் பகுதிக்கு புடவையை செட் செய்ய முக்கோண வடிவத்தில் வருவது போல வைத்து அயன் செய்ய வேண்டும்.

புடவையை மடிப்புக் கலையாமல் அயன் செய்த பிறகு பாக்ஸ் ஃபோல்டிங் செய்ய வேண்டும்.

முந்தியின் உள்புறம் வெளியே இருக்குமாறு தோளில் போட்டுக்கொண்டு, புடவையின் அடிப்பகுதியை அயன் செய்து வைத்திருக்கும் இடுப்பு ப்ளீட்ஸின் மீது வைக்க வேண்டும். இவ்வாறு மடிக்கும்போது சரியாக இருக்கும்.


புடவை மடிப்பு கலையாமல் பாக்ஸ் ஃபோல்ட்டிங் செய்தல்

சாதாரணமாக புடவை மடிப்பதைப்போன்றே மீதமுள்ள புடவையை இடுப்பு ப்ளீட்ஸ் வரை மடித்து, மேல் பகுதி எந்த அளவிற்கு இருக்க வேண்டுமோ அந்த அளவை விட்டுவிட்டு மீதமுள்ள புடவையை மடிப்பு கலையாமல் வைத்து மடிக்க வேண்டும்.

முந்தி பகுதியை வலதுபக்கத்தில் வெளியே விட்டு மீதமுள்ள பகுதியை பாக்ஸில் வைப்பதற்கு ஏற்ப மடித்து, அதனை அப்படியே திருப்பி மேல்பகுதியை செட் செய்து, ப்ளீட்ஸை ஓரமாக வருவதுபோல வைத்து, மடித்து உள்ளே சொருகிவிட வேண்டும்.


பாக்ஸிலிருந்து எடுத்து புடவையை நேர்த்தியாகவும், அழகாகவும் கட்டிவிடும் காட்சி

புடவையை பாக்ஸில் இருந்து எடுத்து எப்போதும் போல காட்டினாள் ரொம்ப ஈஸியாகவும், நேர்த்தியாகவும் ரெடி ஆகிவிடலாம்.

Updated On 16 Sept 2024 11:56 PM IST
ராணி

ராணி

Next Story