இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கூந்தல் பராமரிப்பும், கூந்தல் அலங்கரிப்பும் மிகவும் கடினம்தான். அதுவும் இளம் பெண்களுக்கு சில விசேஷங்களுக்கு என்ன ஹேர் ஸ்டைல் செய்வது என குழப்பமாகவே இருக்கும். பார்க்க சிம்பிளாகவும் இருக்க வேண்டும், புதிதாகவும் தெரிய வேண்டும் என்று நினைப்பார்கள். அவ்வாறு நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால் Messy Braid ஹேர் ஸ்டைலை ட்ரை பண்ணி பாருங்க. அதுவும் மணப்பெண் தோழியாக நிற்பவர்களுக்கும், பார்டி லுக்கிற்கும் இந்த ஹேர் ஸ்டைல் நன்றாக செட்டாகும். அந்த வகையில் மெஸ்ஸி ஹேர் ஸ்டைல் எப்படி செய்வது என சொல்லிக்கொடுத்து விளக்கமளிக்கிறார் அழகு கலை நிபுணர் மிஷல்.

செய்முறை :

தலையில் எண்ணெய் வைத்திருந்தால் 2 முறையேனும் ஷாம்பு பயன்படுத்தி ஹேர் வாஷ் செய்ய வேண்டும். அதன் பிறகு கண்டிஷனர் போட வேண்டும். சீரம் போட்டு தலையை நன்கு காய வைத்துவிட வேண்டும். தலையில் சிக்குகள் இல்லாதவாறு நன்கு சீவி விட வேண்டும். அடுத்ததாக மூஸ் அப்ளை செய்து தலைமுடியை நன்கு ப்ரெப்பிங் செய்ய வேண்டும்.


முடியை சிறு சிறு பகுதியாக பிரித்து கிரிம்பிங் செய்தல்

ஹேர் ஸ்டைலை செய்வதற்கு முன் முடியை கிரிம்பிங் செய்ய வேண்டும். அதற்கு முதலில் முடியை நான்கு பகுதிகளாக பிரித்து கிளிப் போட்டுக்கொள்ளலாம். பின்னர் ஹீட் ப்ரொட்டக்ஷன் ஸ்பிரே அடிக்க வேண்டும். அப்போது முடிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

நான்கு பகுதியில் ஒரு பகுதியை எடுத்து அதில் சிறு பகுதியை பிரித்து முடியை கிரிம்பிங் செய்ய வேண்டும். இதே போல் எல்லா முடியையும் கிரிம்பிங் செய்துவிட வேண்டும்.


ஃப்ரெண்ட் ஹேரில் சைடு பார்டிஷன் எடுத்து சிறிது சிறிதாக டுவிஸ்ட் செய்யும் முறை

முடியை கிரிம்பிங் செய்த பின் கர்லிங் செய்ய வேண்டும். மீண்டும் முடியை சிறு சிறு பகுதியாக பிரித்து கர்லிங் செய்வது ஈஸியா இருக்கும். எக்ஸ்டென்ஷன் தேவைப்பட்டால் அதையும் கிளிப் செய்து, பின் பகுதியில் பாதியிலிருந்து பேக் கோம் செய்து பஃப் போல வைத்து கிளிப் செய்ய வேண்டும்.


பின்பக்க கீழ் முடியை இரண்டாக எடுத்து ஹேர் பேண்ட் போட்டு உள்பக்கமாக விட்டு செக்யூர் செய்தல்

அதன்பிறகு ஃப்ரண்ட் ஹேரில் சைடு பார்டிஷன் எடுத்து இரண்டு பக்கமும் சிறிது சிறிதாக டிவிஸ்ட் செய்து பஃப் மேலே வைத்து கிளிப் செய்து கொள்ளலாம். ஃப்ரண்டில் ஒரு சில முடியை விட்டுவிட வேண்டும். கீழ் முடிகளை இரண்டாக எடுத்து ஹேர் பேண்ட் போட்டு உள் பக்கமாக விட்டு செக்யூர் செய்து விட வேண்டும். இப்படியே நுனிமுடி வரை செய்ய வேண்டும்.


ஃபைனல் லுக் Messy Hair ஸ்டைல்

அக்சஸரீஸ் ஏதேனும் வைத்து செட்டிங் ஸ்பிரே அடித்தால் சூப்பர் Messy Braid ஹேர் ஸ்டைல் ரெடி! இறுதியாக, ஃப்ரண்ட் சைடு விட்ட சில முடிகளை அயன் மெஷின் வைத்து கர்லிங் செய்துவிட வேண்டும்.

Updated On 14 Oct 2024 4:30 PM GMT
ராணி

ராணி

Next Story