இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

திருமணம், பர்த்டே பார்ட்டி, நண்பர்கள் சந்திப்பு, பண்டிகை என எங்கு செல்வதற்கு முன்னும் நாம் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருக்கும். சிலர் இதற்கென ஒரு வாரம் செலவழிப்பதுண்டு. ஆனால் பலருக்கும் தங்களை அழகுபடுத்திக்கொள்ள போதிய நேரமில்லை. இருப்பினும் விசேஷ நாட்களில் பளிச்சென பிரகாசிக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு வெறும் 5 நிமிடங்களில் எளிதாக 5 ஸ்டெப்ஸ்களை பின்பற்றி எப்படி ஜொலிக்கலாம் என்ற ஃபேஷியல் ரகசியத்தை பகிர்ந்துள்ளார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா ரவி.

  • முதலில் ½ டீஸ்பூன் கிளென்சிங் மில்க் உபயோகித்து முகத்தை கடிகார முள் சுழற்சி திசையில் 2 முதல் 3 நிமிடங்களுக்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் முகத்திலிருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்கள் வெளியேறும். மசாஜ் முடிந்த பின்னர் ஸ்பாஞ்ச் உபயோகித்து முகத்தை துடைப்பதைக் காட்டிலும் சுத்தமான ஈரமான காட்டன் துணியைப் பயன்படுத்தி துடைப்பது நல்லது. ஒருமுறை பயன்படுத்திய ஸ்பாஞ்சை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் பருக்கள் மீண்டும் வர வாய்ப்பிருக்கிறது. இந்த கிளென்சிங் முறையை தினமும் செய்வது நல்லது.

சுலபமான குயிக் ஃபேஷியல் செய்யும் முறை

  • அடுத்ததாக பச்சை ஆப்பிள் ஸ்க்ரப் கொண்டு மீண்டும் சுழற்சி முறையில் முகத்தை மசாஜ் செய்யவேண்டும். இந்த ஸ்க்ரபில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் மற்றும் பாலிஃபினால் தன்மை நிறைந்திருப்பதால் இது முகத்தை பிரகாசமாக்க உதவும். முகத்தில் எந்த இடத்திலெல்லாம் சொரசொரப்பாக இருக்கிறதோ அங்கு இன்னும் கவனம் செலுத்தி அழுத்தி மசாஜ் செய்யாமல் மென்மையான முறையில் ஒரு நிமிடத்திற்கு மசாஜ் செய்வது போதுமானது. பிறகு ஈரமான காட்டன் துணி வைத்து முகத்தை சுத்தம் செய்யவேண்டும். முகத்தை எப்போது துடைத்தாலும் மேல்நோக்கி துடைக்க வேண்டும். கீழ்நோக்கி துடைத்தால் சருமம் தொய்வடைய வாய்ப்பிருக்கிறது.
  • சரும துவாரங்கள் மூடுவதற்காக முகத்தில் டோனர் கொண்டு ஸ்ப்ரே செய்யவேண்டும்.
  • ஸ்ப்ரே செய்து 1 அல்லது 2 நிமிடங்கள் கழித்தோ அல்லது உடனடியாகவோ எல்லா மலர்களும் சேர்த்து செய்யப்பட்ட ஃப்ளவர் கிரீம் கொண்டு முகத்தை சுழற்சி முறையில் ஒரு நிமிடத்திற்கு மசாஜ் செய்யவேண்டும். அனைத்து சருமத்திற்கும் பொருத்தமான கிரீம் இது. இதை மசாஜ் செய்வதுபோல் தடவுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கண்களிலிருக்கும் சோர்வு நீங்கும். இதை மாதத்திற்கு 1 அல்லது 2 முறை செய்யலாம். இதுபோன்ற குயிக் ஃபேஷியலை வாரத்திற்கு ஒருமுறை செய்துகொள்ளலாம்.

சுலபமான குயிக் ஃபேஷியல் செய்யும் முறை

  • முகத்தில் தடவிய ஃப்ளவர் கிரீமை சருமம் உறிஞ்சிக்கொள்ளும். இறுதியாக கடற்பாசி ஃபேஸ் பேக் (la marinere face pack) எடுத்துக்கொண்டு அதில் தேவையான வெந்நீரை ஊற்றிக் கலக்கி, முகத்தில் தடவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை கண்கள் மேலும் தடவலாம். 10 - 20 நிமிடங்களுக்கு காயவிட்டு அந்த மாஸ்க்கை மெதுவாக எடுக்க வேண்டும். இந்த ஃபேஸ்பேக் முகத்திற்கு குளிர்ச்சி அளிக்கும். முகத்தை பிரகாசமாக ஒளிர செய்யும்.
Updated On 17 Oct 2023 1:00 AM IST
ராணி

ராணி

Next Story