இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பருவநிலை மாற்றம், வெயில், உணவு பழக்கம், தூக்கமின்மை உள்ளிட்டவற்றால் நமது உடல், முகம், முடி என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. இதற்கிடையில் முக பராமரிப்பு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. எந்த ஸ்கின்னுக்கு எப்படிப்பட்ட Facial பண்ணலாம் என்கிற குழப்பம் நிறைய இருக்கும். அந்தவகையில் சருமத்தை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும்? எப்படிப்பட்ட Facial செய்ய வேண்டும்? என விளக்கமளிக்கிறார் அழகு கலை நிபுணர் இந்திரா.

ஃபேஷியல் செயல்முறை :

வறண்ட சருமத்திற்கான ஃபேஷியலை எப்படி செய்வது என பார்க்கலாம். முதலில் ஒரு ஈர துணியை வைத்து முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். நல்ல க்ளென்சர் பயன்படுத்தி முகத்தில் சுழற்சி முறையில் 3 முதல் 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். பிறகு துடைத்து எடுக்க வேண்டும்.


க்ளென்சர் பயன்படுத்தி முகத்தில் மசாஜ் செய்யும் முறை

அடுத்தபடியாக முகத்தில் டீ டேன் கிரீம் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து நல்ல மசாஜ் கொடுத்து ரிமூவ் செய்ய வேண்டும். இதன்மூலம் வெயிலில் சென்றவந்த டேன் சரியாகும். மேலும் சருமம் தளர்ந்திருந்தால் இருக்கமாகும். இளமைக் குறையாது.

முகத்திற்கு ஸ்ட்ரீம் கொடுத்து பிளாக் & வொயிட் ஹெட்ஸை எடுக்க வேண்டும். Facial செய்ய முடியாவிட்டாலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை முகத்திற்கு ஸ்ட்ரீம் கொடுத்து பிளாக் & வொயிட் ஹெட்ஸ் ரிமூவ் செய்வது அவசியம். இதனால் முகம் பார்க்கும்போது நன்றாக இருக்கும்.


மசாஜ் கிரீமால் மசாஜ் செய்தல்

முகத்தில் ஈரத்தை துடைத்த பிறகு மசாஜ் கிரீம் எடுத்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். எல்லா ப்ரெஷர் பாயிண்டுகளையும் சரியான முறையில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும்.

இறுதியாக ஒரு பேக் போட வேண்டும். 20 முதல் 30 நிமிடங்கள் வரையாவது அதை காயவிட்டு துடைத்து எடுத்தால் முகத்தில் இன்ஸ்டன்ட் ரிசல்ட் கிடைக்கும்.


ஃபேஷியல் செய்து முடித்த பிறகு

மாதம் ஒருமுறையேனும் இப்படி சருமத்திற்கு ஏற்ற Facial செய்வது நல்ல பராமரிப்பு முறையாக இருக்கும்.

Updated On 28 Oct 2024 11:05 PM IST
ராணி

ராணி

Next Story