இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய தலைமுறையினருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை முகப்பரு, டார்க் ஸ்பாட், சீரற்ற சரும நிறம் என சொல்லிக்கொண்டே போகலாம். இதை சரி செய்ய கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி பக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதேநேரம் நிரந்தர பலன் கிடைக்க கால அவகாசம் எடுக்கும். இதுபோல நிரந்தர பலனுக்கு நமது நாட்டு மருந்து கடைகளில் பல பொருட்கள் எளிமையாக கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தி வீட்டிலேயே சிறந்த அழகை நம்மால் பெற முடியும். அதுகுறித்து சொல்லிக்கொடுத்து விளக்குகிறார் அழகு கலை நிபுணர் பிரியா.

ஃபேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள் :

மஞ்சிஸ்டா

தயிர்

எலுமிச்சை சாறு


செய்முறை :

ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மஞ்சிஸ்டா பொடியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவைக்கேற்ப தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவை பேஸ்ட் போல வந்ததும், முகத்தில் டார்க் ஸ்பாட் இருக்கும் இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். தொடர்ந்து இதனை பின்பற்றி வந்தால் நாளடைவில் அது சரியாவதை பார்க்க முடியும். முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகள், கரும்புள்ளி, கருவளையம் என எல்லா விதமான பிரச்சினைக்கும் சிறந்த தீர்வாக இந்த ஃபேஸ் பேக் இருக்கும்.

ஸ்கிரப் செய்ய தேவையான பொருட்கள் :

கேரட்

பீட்ரூட்

தேன்

வெள்ளை சர்க்கரை


செய்முறை :

ஒரு மிக்ஸி ஜாரில், நறுக்கிய கேரட் மற்றும் பீட்ரூட்டை போட்டு, அதில் சிறிதளவு தேன் சேர்க்க வேண்டும். மூன்றையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்து, அதனுடன் 1 தேக்கரண்டி போல வெள்ளை சர்க்கரை கலந்து முகம், கழுத்து மற்றும் உடல் முழுவதும் கூட ஸ்கிரப் செய்யலாம். அதிக அளவில் வெயிலில் எக்ஸ்போஸ் ஆகி சருமம் டேன் ஆனவர்கள், இந்த ஸ்கிரப்பை பயன்படுத்தினால் டேன் குறைவதுடன், சருமத்திற்கு உடனடி பொலிவும் கிடைக்கும்.

முகப்பரு மார்க்ஸை போக்க தேவையான பொருட்கள் :

கட்டி மஞ்சள்

ஜாதிக்காய்

கடுக்காய்

எலுமிச்சை


செய்முறை :

மஞ்சள், கடுக்காய், ஜாதிக்காய் ஆகிய மூன்றையும் கல்லில் வைத்து, எலுமிச்சை சாறு கலந்து உரசி முகப்பரு மார்க்ஸ் இருக்கும் இடங்களில் தொடர்ந்து பூசி வர விரைவில் குணமாகும்.

Updated On 4 Oct 2024 7:31 AM GMT
ராணி

ராணி

Next Story