2025 ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் 2025 மே 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தொழில் தொடங்க நினைப்பவர்கள் ஆரம்பியுங்கள். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் என அத்தனை தொழில் செய்பவர்களுக்கும் லாபம், வருமானங்கள் இருக்கிறது. கல்வி நன்றாக உள்ளது. புரொடக்ஷன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த லாபம் இருக்கிறது. அம்மாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். புதிய காதல் மலரும். ஏற்கனவே காதலித்தால் திருமணத்தில் முடியும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நடக்கும் அல்லது அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் எதிர்பார்த்த லாபம், நிலுவையில் உள்ள பணங்கள் வராமல் இருந்தால் வந்து சேரும். அப்பா மற்றும் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆண் நண்பர்களால், மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும். இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி மற்றும் சிவனோடு கூடிய அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.
