2025 மார்ச் 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும். பெரிய அளவில் தொழில் செய்ய நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளது. மண வாழ்க்கையில் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் அதனை அதிகப்படுத்துங்கள். பொருளாதார சூழ்நிலைகள் பரவாயில்லை. கல்வி நன்றாக உள்ளது. அப்பா, அம்மா இருவரின் அன்பு ஆதரவு கிடைக்கும். புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. அதற்கு தகுந்த லாபமும் இருக்கிறது. உங்கள் காதல் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகளும் நிறைய உள்ளது. ஜாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்படும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், ஆன்லைன் பிசினஸ் போன்ற எந்த யூக வணிகங்களாக இருந்தாலும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் பொறுமை, நிதானமாக பார்த்து செய்யுங்கள். வேலை, வாய்ப்புகளை பொறுத்தவரை சுமாராக இருக்கிறது. தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. முன்னேற்றம் என்பது இல்லை. உறவுகளால் ஒரு பக்கம் நன்மை, இன்னொரு பக்கம் பிரச்சினை இரண்டும் கலந்து இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் தன்வந்திரி பகவானை வழிபாடு செய்யுங்கள்.
